ஏற்காடு வாகன சோதனையில் ரூ.2.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்





ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறுவதையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் தேர் தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் 33 இடங்களில் சோத னைச்சாவடி அமைத்து, தேர்தல் கண்காணிப்பு குழு பறக்கும் படை, காவல் துறை இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை இரவு 2 மணி அளவில் சேலம் அரபிக்கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி மையத்தில் காவல்துறை யினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். காரில் 10 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. நகைக்கு எவ்வித ஆவணமும் இல்லை. நகைகளை கேரளாவுக்கு கொண்டு செல்வதாக காரில் இருந்த மூன்று பேர் கூறினர்.

பெங்களூரைச் சேர்ந்த நகைக் கடையின் கார் டிரைவர் ராம்ஜி மிஸ்ரா, விற்பனையாளர்கள் பிரகாஷ், பன்னலால் ஆகியோர் கேரள மாநிலம் திருச்சூர், கோட்டயம், கொல்லம் மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளுக்குத் தங்க நகையை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தேர்தல் நடத்தும் அதிகாரி சபாபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE