தண்ணீர் லாரிகளால் மேடவாக்கத்தில் விபத்துகள்

மேடவாக்கத்தில் தண்ணீர் லாரி-களால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன.

சென்னை புறநகர் பகுதியான கிழக்கு தாம்பரம் வேளச்சேரி நெடுஞ் சாலையில் 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் ஓடுகின்றன. மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், கோ விலம்பாக்கம், நன்மங்கலம், அகரம், தென் பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் விவசாயக் கிணறுகளில் சட்டத்திற்கு புறம்பாகவும், திருட்டுத் தனமாகவும் இந்த லாரிகள் தண் ணீரை நிரப்பிக் கொள்கின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், பண்ணை வீடுகளுக்கு விநியோகம் செய்கின்றன. மேடவாக்கம், பள்ளிக்கரணை சாலையில் தண்ணீர் லாரிகளால் காலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அலுவலகம் செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இவை தவிர அதிவேகமாக தண்ணீர் லாரிகளை அவற்றின் டிரைவர்கள் இயக்குவதால், அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகின்றன. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மேட வாக்கம் சாலையில் வேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் பைக்கில் தாயுடன் கல்லூரிக்கு சென்ற சுகன்யா (19) என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேடவாக்கம் சாலை யில் தண்ணீர் லாரிகளால் தினமும் 5 சிறிய விபத்துகளாவது நடக்கிறது. மேடவாக்கம், பள்ளிக்கரணை சாலையில் தண்ணீர் லாரிகள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் போலீஸாரிடம் பல முறை புகார் கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மேடவாக்கம் பகுதி மக்கள் கூறியதாவது:

தண்ணீர் லாரிகள் மெதுவாக வந்தால் பரவாயில்லை. ஒலியை எழுப்பிக் கொண்டு வேகமாக வரு கின்றனர். இதனால், பைக்கில் செல்பவர்கள் பயந்து போய் கீழே விழுந்து விடுகின்றனர். சாலையில் நடந்து செல்லவே பயமாக உள்ளது. விவசாயத்திற்கு அரசு வழங்கியுள்ள இலவச மின்சாரத்தை பயன்படுத்தி லாரிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதற்கு விவசாயிகள் மட்டுமின்றி, இந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் உடந் தையாக உள்ளனர். போலீஸில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. விபத்து நடந்து உயிரி ழப்பு ஏற்பட்டால் மட்டும் 2 நாட் களுக்கு போலீஸார் பாதுகாப்பு கொடுக் கின்றனர். கிழக்கு தாம்பரம் முதல் வேளச்சேரி வரையுள்ள சாலையில் பள்ளி, கல்லூரிகள் அதிகமாக உள்ளன. அதனால், இந்த சாலையில் தண்ணீர் லாரிகள் இயக்குவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE