மதுரையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படங்களை ஆவணப்படுத்தி தியாகியின் பேரன் புகைப்படக் காட்சியை நடத்தி வருகிறார்.
மதுரை திருநகரைச் சேர்ந்தவர் எம்.ஏ. சர்தார். மதுரை சுதந்திரப் போராட்ட வீரர் ஹாஜி எச். முகமது மவுலானா சாகிபுவின் மகன் வழிப் பேரனான இவர், சுதந்திரப் போராட்ட வரலாற்றை நினைவுகூறும் பலவித தகவல்களை திரட்டி பாதுகாத்து வருகிறார். அதில் அவரது தாத்தா ஹாஜி எச். முகமது மவுலானா சாகிபு, வைத்தியநாத அய்யர், ஜார்ஜ் ஜோசப், ஜீவா, கே.டி.கே. தங்கமணி, விஸ்வநாததாஸ், எல்.கே. துளசிராம், ஐ.மாயாண்டிபாரதி, கே.பி. ஜானகியம்மாள், எஸ்.சொர்ணத்தம்மாள் போன்ற தியாகிகள் புகைப்படங்களையும், அவர்களின் போராட்டங் களையும் நம் நினைவுக்கு கொண்டு வருகிறார்.
காந்தி, நேரு போன்ற தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெறத் தவறவில்லை. 1939-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி மதுரை வந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை முத்துராமலிங்க தேவர் வரவேற்கும் புகைப்படம், அரசின் சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்றிருந்த உறுப்பினர்களின் புகைப்படம், இந்திய பிரிவினைக்கு எதிராக முஸ்லிம்கள் கூட்டம் நடத்தியது, முதல் பிரதமர் நேருவின் சுதந்திரதின உரை, குடியரசு தலைவர் ராஜேந்திரபிரசாத்தின் உரை உள்ளிட்ட முக்கிய புகைப் படங்களும் உள்ளன.
சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய நாட்களில்தான் சேகரித்துள்ள புகைப்படங்களை கல்லூரி, காந்தி அருங்காட்சியகம், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் கண் காட்சியாக வைத்து வருகிறார். மதுரை ஜில்லா தியாகிகள் மலர் என்ற பெயரில், 1948-ம் ஆண்டு மார்ச்சில் வெளியான அரிய புத்தகத்தை பாதுகாத்து வருகிறார்.
இதுகுறித்து எம்.ஏ. சர்தார் கூறியது: சுதந்திர வரலாற்றை இளைஞர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில், கடந்த 25 ஆண்டுகளாக ஆவணப்படுத்தி வருகிறேன். 1917-ம் ஆண்டு முதல் 1947 வரை நடைபெற்ற சைமன் குழு எதிர்ப்பு, கள்ளுக்கடை மறியல், சட்ட மறுப்பு, உப்பு சத்தியாகிரகம், உள்ளிட்ட நிகழ்ச்சிகளை திரட்டி உள்ளேன். குறிப்பாக தங்கள் ஊர் தியாகிகளின் வரலாறு கூட பலருக்கு தெரியவில்லை. அவர்களின் தியாகத்தை நாம் மறந்து விடக் கூடாது. சுதந்திரதினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் இவற்றை காட்சிப்படுத்தி வருகிறேன். ஆய்வுக் கட்டுரை க்காக சிலர் என்னிடம் உள்ள இந்த விவரங்களை வாங்கி செல் கின்றனர்.
நிரந்தரக் கண்காட்சி அமைக்க அரசு வசதி ஏற்படுத்தி கொடுத்தால் இவையனைத்தும் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago