50 மில்லியன் பேர் மனச்சிதைவு நோயுடன் வாழ்வதாக ஆய்வில் தகவல்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

இன்று உலக மனநல நாள்

உலகளவில் 50 மில்லியன் (5 கோடி) மக்கள் மனச்சிதைவு நோய் பாதிப்புடன் வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் 10 சதவீதம் பேர் தற்கொலை செய்து இறக்கின்றனர்.

மனிதனின் மனம் எப்போ தும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிற் சாலை போன்றது. தூக்கத்தில்கூட கனவுத் தொழிற்சாலைபோல மனம் இயங்குவதால் மனதுக்கு ஓய்வு என்பதே கிடையாது. மனம் இருக்கும் இடமும் மூளைதான். மூளையின் செயல்பாடுகளில் சிதைவு ஏற்படும்போது நிச்சயமாக ஒரு மனிதனின் மனநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அப்படி உருவாகும் ஒருவகை மனநோய்தான் ஸ்கிசோபிரினியா (Schizophrenia) என்றழைக்கப்படும் மனச்சிதைவு நோய்.

இதுகுறித்து மன நல மருத்துவர் ஆ.காட்சன் ‘தி இந்து’விடம் கூறியது: உலக அளவில் சுமார் 5 கோடி மக்கள் மனச் சிதைவு நோய் பாதிப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 70 லட்சம் பேர் அடங்குவர். இதில் 10% பேர் தற்கொலை செய்து இறக்கின்றனர். நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் குறைவானோர்தான் மருத்துவ உதவியை நாடுகின்றனர். ஆதர வின்றி தெருக்களில் திரியும் பெரும்பாலான மனநோயாளிகள் மனச்சிதைவு நோயால் பாதிக்கப் பட்டவர்கள்தான்.

மனச்சிதைவு நோய்க்கு பல காலகட்டங்களில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நவீனகால அறிவியல் முன்னேற்றங்கள் மரபணுக்களில் எற்படும் மாற்றங்களே இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நிரூபித் திருக்கின்றன. சாதகமற்ற வாழ்க்கைச்சூழல், மனஅழுத்தம், குழந்தைப் பருவத்தில் மனம் மற்றும் உடல்ரீதியான பாதிப்புகள், போதைப் பழக்கங்கள், கலாசார மாற்றங்கள் போன்றவை இந்த மரபணு மாற்றங்களை ஏற்படுத்து வதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

மனச்சிதைவு நோய் மருந்து களால் குணப்படுத்தக்கூடியதே. ஆரம்பகட்டத்திலேயே நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டால் எளிதில் கட்டுப்படுத்தலாம். பல புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பு நோயை குணமாக்கும் சதவீதத்தை அதிகரித்துள் ளதுடன் பக்கவிளைவுகள் குறைந்துகாணப்படுவதால் நோயாளிகள் பயமின்றி உட்கொள்ளவும் உதவியாக உள்ளது. சரியான முறையில் மருந்துகளைசாப்பிடுவோரின் சுமார்எழுபது சதவீதத்துக்கும் அதிக மானோர் நல்ல முன்னேற்றம் பெற்று சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதுதவிர சிலருக்கு மின் அதிர்வு சிகிச்சை (Electro convulsive therapy) முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மின் அதிர்வு சிகிச்சையானது சினிமாக்களில் காண்பிக்கப் படுவதுபோல் ஒரு கொடூரமான சிகிச்சை அல்ல. தற்போது மயக்கவியல் மருத்துவர்களின் உதவி யுடன் 5 நிமிடம் மயக்க மருந்து கொடுத்தே இச்சிகிச்சை செய்யப் படுவதால் நோயாளிக்கு எந்த சிரமமும் ஏற்படுவதில்லை.

முடிந்த அளவுக்கு நோயாளியை வீட்டில் வைத்து பராமரிப்பதே நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்ற ஆராய்ச்சியின் முடிவாகத் தான் உலக அளவில் பெரும் பாலான மனநல காப்பகங்கள் மூடப்பட்டுவிட்டன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்