அலங்காநல்லூரில் கார் வென்ற காளைக்கு வழிபாடு; ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயற்சி: இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் தகவல்

By அ.வேலுச்சாமி

ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயற்சி செய்து வருவதாக அலங்காநல்லூரில் கார் பரிசு வென்ற காளையின் உரிமையாளரும், இலங்கை அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மதுரை அலங்காநல்லூரில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டின்போது வீரர்களிடம் பிடிபடாமல், நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடியதற்காக, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க கவுரவத் தலைவரும், இலங்கை ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானின் காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

அந்த காளை உள்பட அவரது 10-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு திருச்சி பிராட்டியூரிலுள்ள ரெட்டமலை ஒண்டிக்கருப்பண்ண சுவாமி கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் தொண்டமான் “தி இந்து” விடம் கூறியது:

இலங்கையின் அமைச்சராக இருந்தாலும், எனது பூர்வீகம் தமிழ்நாட்டில் திருப்பத்தூர் அருகேயுள்ள எம்.புதூர் கிராமம். இங்கு பரம்பரை, பரம்பரையாக காளைகளை வளர்த்து வரு கிறோம். எங்களது காளைகள் பரிசு வெல்வது, இது முதல் முறையல்ல.

நன்கு தேர்வு செய்து கன்றுக் குட்டிகளை வாங்கி, அவற்றுக்கு ஆண்டுக்கணக்கில் பயிற்சி கொடுக்கிறோம். ஜல்லிக்கட்டுக்காக காளைகளை அழைத்துச் செல்லும்போது அவற்றுக்கு சோர்வு ஏற்படாமல் இருக்க, 5 அறைகளுடன் கூடிய சிறப்பு வாகனத்தை வடி வமைத்துள் ளோம். தனி நீச்சல் குளம், பயிற்சி மைதானம் ஏற்படுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த காரணமாக இருந்த மாணவர்களுக்கும், நிரந்தர சட்டம் வடிவமைத்துக் கொடுத்த அரசுக்கும் நன்றி. கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள்போல ஜல்லிக்கட்டுக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்க முயற்சி செய்து வருகிறோம். இதற்காக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், அந்நாடுகளின் அரசு நிர்வாகம் மற்றும் அரசியல் பொறுப்புகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் ஜல்லிக்கட்டு விவரங்கள், படங்கள், வீடியோக் களை வலைதளங்களில் பிரச்சாரம் செய்கிறோம். இதன்மூலம், வரும் காலங்களில் சுற்றுலாவுக்காக மட்டுமின்றி ஜல்லிக்கட்டு பார்ப்பதற்காகவும் அதிகளவிலான வெளிநாட்டினர் வருவர்.

பொங்கலின்போது மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டே இருக்கும். அதுகுறித்த அட்டவணையை தயார் செய்து, சுற்றுலாத் துறை மூலம் வெளி நாட்டவர்களுக்கு வழிகாட்ட உள்ளோம். இதற்கான பணிகளை ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில செயலாளர் ஒண்டிராஜ், நிறுவனர் அம்பலத்தரசு, சட்ட ஆலோசகர் ராஜேஷ், ராஜா ஆகியோர் மேற்கொண்டு வருகின் றனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்