சென்னையில் குறைந்த விலை வீட்டு மனைகள் விற்பதற்கான அறிவிப்பை சிஎம்டிஏ கடந்த மாதம் வெளியிட்டது.
சிஎம்டிஏ மனைகள் அனைத்து வசதிகளுடன் இருப்பதால் அவற்றை வாங்க பொதுமக்களிடம் பெரும் ஆர்வம் காணப்பட்டது. மனைகளை வாங்க சுமார் 77 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாளான கடந்த 6-ம் தேதி எழும்பூர் பகுதியே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து 35 ஆயிரம் மனுக்களை சமர்ப்பித்தனர்.
அடுத்ததாக வேறொரு இடத்தில் மனைகள் விற்க சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சிஎம்டிஏ உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ நிருபரிடம் கூறுகையில், ‘‘சென்னை மறைமலை நகரில் நெடுஞ்சாலைக்கு அருகில் சில இடங்களை மனைப் பிரிவுகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அவற்றில் சில மனைகள் ஏற்கெனவே சிஎம்டிஏ-வுக்கு சொந்தமானவை. அருகில் உள்ள சில பகுதிகள் வேறு துறைகளிடம் இருந்தன. தற்போது அவையும் சிஎம்டிஏ வசம் வந்து விட்டன. அவற்றையும் சேர்த்து 150 மனைகள் வரை உருவாக்கலாம்.
அந்த மனைகளை விரைவில் குலுக்கல் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கு ஒரு சில மாதங்கள் ஆகும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago