புதுக்கோட்டை நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டயைச் சேர்ந்த குமரேசன் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:
புதுக்கோட்டை நகராட்சியின் மையத்தில் அமைந்துள்ள நைனாரிக்குளத்தை பலர் ஆக்கிரமித்துள்ளனர். நகராட்சி சார்பிலும் குளத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு பொதுக்கழிப்பிடம், ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. சின்ன வெங்கபாயன் குளமும் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு விற்கப்படுகிறது. இதனால் இந்த குளங்களில் மழை காலத்தில் நீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை பகுதியிலுள்ள பல்வேறு குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஒரு மாதத்தில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பிப்ரவரி 2-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை ஏற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago