உயர் அழுத்த மின்சாரம் தாக்கி மீண்டும் ஒரு காட்டுயானை பலி: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறை தயக்கம்?

By கா.சு.வேலாயுதன்

மேட்டுப்பாளையம் அருகே விதிகளுக்கு புறம்பாக அமைக்கபட்டிருந்த உயரழுத்த மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் காட்டுயானைகள் இப்படி மின்வேலியில் 5க்கும் மேற்பட்டவை இறந்துள்ளது. இதன் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக விவசாயிகள் தரப்பில் பிரச்சனை கிளம்பும் என்பதால் வனத்துறை வாளாவிருப்பதாக புகார்கள் கிளம்பியுள்ளது.

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகதிற்குட்பட்ட சிட்டேபாளையம் பகுதியில் நேற்றிரவு காட்டு யானை கூட்டமொன்று வந்துள்ளது. இவை வனத்தையொட்டிய முட்புதர் காட்டு வழியே வந்துள்ளது. கடும் வறட்சி காரணமாக தண்ணீர் தேடி வந்த இந்த யானைகள் மலையடிவாரத்தில் உள்ள சிட்டேபாளையம் கிராமத்தில் மாணிக்கம் என்பவரது தோட்டத்தின் வழியே கடந்து செல்ல முற்பட்டுள்ளது. அப்போது அப்பாதையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சம்பவ இடத்திலேயே உயரழுத்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது.

இது பற்றி தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள், இறந்து கிடந்த யானையின் துதிக்கையில் மின்சாரம் பாய்ந்துள்ளதையும், அப்பகுதியில் விவசாயத்திற்காக கிணற்று மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை நேரிடையாக மின்வேலியில் செலுத்தியுள்ளதை கண்டறிந்து உறுதிப்படுத்தினர். இதனையடுத்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சமந்தப்பட்ட தோட்டத்திற்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர். தோட்ட உரிமையாளர் மீது வன சட்டப்படி வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன் பின்னர் வனத்துறை மருத்துவர் யானையின் உடலை உடல் கூறு ஆய்வு நடத்திய பின்னர் அங்கிருந்த புதர்காட்டிலேயே குழி தோண்டி புதைத்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வறட்சி காரணமாக யானைகள் வனத்தை விட்டு வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வழங்கியுள்ளோம். காட்டு யானைகள் வந்தால் அவற்றை விரட்ட முயற்சிக்காமல் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், குறிப்பாக எந்த காரணத்தைக்கொண்டும் விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரத்தை ஆபத்தான வகையில் தோட்டத்து வேலியில் பாய்ச்சக்கூடாது, இது யானைகளை மட்டுமில்லாது மனிதர்களையும் கொன்று விடும் வாய்ப்புள்ளது என பல முறை எச்சரித்துள்ளோம்.

அதையும் மீறியே இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்படி சட்டவிரோதமாக மின்வேலி அமைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!’ என்றும் தெரிவித்தனர். ஆனால் இரவில் முன்தினம் இரவு மின்வேலியில் பட்டு காட்டுயானை இறந்தும் ஒரு நாள் முழுக்க சம்பந்தப்பட்டவர் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது.

‘இப்படி உயர் அழுத்த மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பது மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதிகளில் சமீப காலமாக கூடுதல் ஆகி வருகிறது. இதற்கு காரணமான விவசாயிகள் மீது நடவடிக்கை எடுத்தால் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த தயாராக உள்ளனர். தவிர, யானைகள் எங்கள் பட்டா தோட்டங்களுக்குள் வராமல் பாதுகாப்பது வனத்துறையினர் பணி. அதை செய்யாத வனத்துறையின் மீதே இந்த வழக்கை பதிவு செய்ய வேண்டும். அவர்கள்தான் இதற்கு பொறுப்பு. காட்டு விலங்குகளால் சேதப்படும் விளைச்சலுக்கு வனத்துறையினரே இழப்பீடு தரவேண்டும் என்றெல்லாம் புதுமையான கோரிக்கைகள் வைத்து அவர்கள் போராடுகின்றனர். எனவே இப்படிப்பட்ட விஷயங்களில் விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குகின்றனர் வனத்துறையினர்.

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் பகுதியில் ஒரு விவசாயி தோட்டத்தில் 3 காட்டுயானைகள் மின்வேலியில் சிக்கியது. அதில் 30 மற்றும் 20 வயது மதிக்கத்தக்க 2 பெண்

யானைகள் மின்சாரம் தாக்கி உடனே உயிரிழந்தது. அதே சமயம் கம்பியின் சிக்கி துதிக்கை கிழிந்த நிலையில் சுற்றிய 2 வயது மதிக்கத்தக்க குட்டியானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தனர் வனத்துறையினர். அதுவும் பிறகு இறந்தது. இந்த விவகாரத்தில் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட விவசாயி மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர் முன்ஜாமீன் பெற்று வழக்கு நடத்தி வருகிறார். இதேபோல் மேட்டுப்பாளையம் கேளிக்கை பூங்கா அருகில் உள்ள தோட்டத்தில் புகுந்த ஓர் யானை மின் வேலியில் பட்டு உயிரிழந்தது.

அதேபோல் 6 மாதங்களுக்கு முன்பு லிங்காபுரம் பகுதியில் மழைபெய்த போது ஒரு தோட்டத்தில் புகுந்த யானையை ஒரு விவசாயி விரட்ட, அந்த யானை மின் வேலியில் சிக்கி உயிரிழக்க, அதே மின்சாரம் பாய்ந்து விவசாயியும் இறந்தார். இந்த 2 சம்பவங்களிலும் வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர் பெரியதாக நடவடிக்கை இல்லை. முன்பெல்லாம் காட்டு விலங்குகள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டால் அவ்வளவு சுலபமாக ஜாமீனிலேயே வரமுடியாது. இப்போதெல்லாம் மின்சார இணைப்பு குறிப்பிட்ட தோட்டத்திற்கு துண்டிக்கப்படுகிறது. அடுத்து வழக்கு மட்டும் பதிவு செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்டவர் முன் ஜாமீனிலேயே வந்து விடுகிறார் இதற்கெல்லாம் விவசாயிகளின் போராட்டங்கள்தான் காரணம். இப்படியே போனால் மின்வேலியில் சிக்க உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை இன்னமும் அதிகமாகும்!’ எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்