வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழை

By செய்திப்பிரிவு

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலிருந்து கிழக்கு திசையில் 90 கி.மீ. தூரத்தில் இலங்கை கரையை கடந்தது.

நாகப்பட்டினத்திலிருந்து 290 கி.மீ. தூரத்தில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் கரையை கடந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தென் மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழக்கும்.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்திலும் வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களிலும் ஆங்காங்கே கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடு. எனவே மீனவர்கள் ஆழ் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கரையோரத்தில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்