பொருளாதார கொள்கை, வெளியுறவுக் கொள்கை ஆகிய விஷயங்களில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுக்கும் பெரிய வித்தி யாசம் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நம் நாடு தற்போது அரசியல், சமூக, தார்மீக, ஒழுங்குமுறை நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்க பொருளாதார கொள்கைகளை மாற்ற வேண்டும். கொள்கை விஷயத்தில் காங்கிர சுக்கும், பாஜகவுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. பாஜக முன்னிறுத்தும் குஜராத் மாடலும், மன்மோகன் சிங்கின் கார்ப்பரேட் அரசும் ஒன்றுதான். இரண்டுமே முதலாளித்துவ கொள்கையைத் தான் கடைபிடிக்கின்றன. பொருளா தார கொள்கை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சிக்கி இருப்பதால்தான் வறுமை, பணவீக்கம், பொருளாதார பிரச்சினைகளை இன்னும் தீர்க்க முடியவில்லை.
நரேந்திர மோடி பாஜக வேட்பாளர் அல்ல, ஆர்.எஸ்.எஸ். வேட்பாளர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை நெறிமுறைகளை எதிர்க்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இந்தியா பலதரப்பட்ட மக்கள் வாழும் ஒரு ஜனநாயக நாடு. இரு கட்சிகள் கொண்ட நாடு அல்ல இந்தியா. தற்போது ஆர்.எஸ்.எஸ். அரசியல் தளத்தில் முன்னணியில் இருக்கிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago