சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

By ஜெ.வெங்கடேசன்

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படவுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலையும், அதன் சொத்துக்களையும் நிர்வகிக்க செயல் அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கோயிலை நிர்வகித்துவரும் பொது தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.போப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களும் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு அளிப்பதை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு திங்கள்கிழமை (ஜனவரி 6) வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடியபோது கூறுகையில், “அரசியல் சாசனம் சட்டம் பிரிவு 26-ன்படி மதம் சார்ந்த அமைப்பை ஏற்படுத்தவும், அதை நிர்வகிப்பதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 1952-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வகிப்பதற்கு உள்ள உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இக்கோயிலை பொது தீட்சிதர்கள்தான் நிர்வகித்து வருகின்றனர்.

கோயில் நிர்வாகத்தில் ஏதாவது முறைகேடு நடைபெற்றிருந்தால் அதன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதற்காக கோயிலின் நிர்வாகத்தையே அரசு கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றார். இந்த வழக்கில் பொது தீட்சிதர்கள் சார்பில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வாதாடினார்.

தமிழக அரசு தரப்பில், கோயிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை நியமித்தது சரியான நடவடிக்கைதான் என்று வாதிடப்பட்டது. 1952-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வகிப்பதற்கு உள்ள உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்