கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் வருவாய்த்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் 94 எம்எல்ஏக்கள் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் மற்ற எம்எல்ஏக்களின் நிலை என்ன? அவர்கள் எங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர் போன்ற விவரங்கள் தெரியாததால், அதி முக வட்டாரத்தில் அடுத்தகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப் பதற்காக அதிமுக எம்எல்ஏக்களை காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக் கத்தை அடுத்த கூவத்தூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த நான்கு நாட்களாக தங்க வைத்துள்ளனர். இந்நிலையில், எம்எல்ஏக்களைக் காணவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து, கூவத்தூரில் தங்கியுள்ள எம்எல் ஏக்களிடம் விசாரணை நடத்துவதற் காக செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீஸார், நேற்று அதிகாலை 6:30 மணிக்கு கூவத்தூர் சொகுசு விடுதிக்குச் சென்றனர்.
சுமார் 5 மணி நேரமாக நீடித்த விசாரணையில் விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களிடம் தனித் தனியாக விசாரணை மேற் கொள்ளப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பின்னர், விசாரணை முடித்த வருவாய்த்துறையினர் பிற்பகல் 12 மணியளவில் விடுதி யில் இருந்து வெளியேறினர். அப்போது, செய்தியாளர்கள் அவர்களை சந்திக்க முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களை சந்திக்கவிட்டாமல் தடுத்தனர். இதில் போலீஸாருக்கும் செய்தி யாளர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து வருவாய்த் துறை யினர் வாகனத்தில் விரைந்து புறப்பட்டு சென்றுவிட்ட்டனர்.
இந்நிலையில் கூவத்தூர் தனியார் விடுதியில் 94 எம்எல்ஏக்கள் மட்டுமே தங்கவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால், மற்ற எம்எல்ஏக்களின் நிலை என்ன என்ற விவரங்கள் தெரியாதாதினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா ஆதரவு எம்எல் ஏக்கள் சிலர், விடுதியில் 128 எம்எல்ஏக்கள் தங்கியுள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், வருவாய்த்துறையினர் 94 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளதால், மீதமுள்ள 34 ஏம்எல்ஏக்கள், முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரி வித்துள்ளனரா என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாக அதிமுகவினர் சிலர் குறிப்பிட்டனர்.
எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தியது தொடர்பாக, செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ‘தி இந்து’-விடம் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்பேரில் விடுதி யில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களிடம் தனித் தனியாக வைத்து விசாரித்தோம். இதில், 94 எம்எல்ஏக்களிடம் அறிக்கை பெற்றுள்ளோம். இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்படும் என்றார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண் காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்பேரில் வரு வாய்த்துறையினர் விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை அறிக்கை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago