மாமல்லபுரத்தில் கற்சிற்ப தொழிலுக்கு கற்கள் கிடைக்காமல் சிற்பிகள் அவதிப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் இருந்து கற்கள் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிற்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கற்சிற்பங்களுக்கு புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் பல்வேறு நாடுகளுக்குத் தேவையான கற்சிற்பங்கள் வடிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. உள்நாட்டுக்கு தேவையான சிற்பங்களும் இங்கு வடிக்கப்படுகின்றன. இந்தத் தொழிலில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சிற்பிகளின் சிக்கல்
அதனால் மாமல்லபுரத்தை மத்திய அரசு ‘சிற்ப கிராமம்’ என்று அறிவித்துள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க இப்பகுதியில் வாழும் சிற்பிகள், சிற்பங்கள் செய்வதற்கு பிரதானமானதாக விளங்கும் கற்கள் கிடைப்பதில்லை என்று சிற்பிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மாமல்லபுரம் சிற்ப உற்பத்தியாளர் சங்கத்தின் செயலர் கே.மகாதேவன் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கற்குவாரிகளில் ஜல்லி கற்கள் மற்றும் சக்கைகள் எடுக்க, மாவட்ட ஆட்சியர் மூலமாக கனிம வளத்துறையின் அனுமதி வழங்கப்படுகிறது. விதிகளின்படி அங்கிருந்து பெரிய கற்களாக கொண்டு செல்ல அனுமதி இல்லை.
வெளி மாவட்டங்களிலிருந்து...
இதனால் வெளி மாவட்ட கற்குவாரிகளில் இருந்து பல்வேறு வழிகளில் முயற்சித்து பெரிய கற்களை வாங்கி வருகிறோம். இதனால் கூடுதல் செலவாகிறது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்ட கற்குவாரிகளில் இருந்து, சிற்பத்துக்கு தேவையான பிரத்யேக கற்களை எடுத்து கொள்ள ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும். இதற்கு முன்பு இருந்த ஆட்சியர்களிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்திருந்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் தொழிலுக்குகற்கள் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் கேட்டபோது, “சிற்பிகளிடம் அவர் களது பிரச்சினையை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago