மங்கலதேவி கண்ணகிக்கு இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழக எல்லையில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விழா நடைபெறுகிறது.
ஐம்பெரும் காப்பியத்தின் அடையாளமாக இன்று இருக்கும் ஒரே நினைவுச் சின்னம் தமிழக, கேரள எல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சேர மன்னன் கண்ணகிக்காக கட்டிய கோயில்தான்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக் குள் கோயில் இருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே (சித்ரா பவுர்ணமியன்று) தரிசிக்க முடியும். இன்று (மே 10) சித்ரா பவுர்ணமி என்பதால் மங்கலதேவி கண்ணகியை வணங்க மக்கள் ஆர்வத்துடன் செல்கின்றனர்.
இதுபற்றி மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செயலர் டி.ராஜகணேசன் கூறியதாவது: தமிழக பகுதியான பளியன்குடி வழியாக கண்ணகி கோயிலுக்கு செல்ல 1934-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பாதை அமைத்துக் கொடுத்தனர். இந்தப்பாதையில் தமிழக அரசு சாலை அமைத்துக் கொடுத்தால் கோயிலுக்குச் செல்ல கேரள அரசை நம்பியிருக்கத் தேவையில்லை. ஆண்டு முழுவதும் கோயிலுக்கு சென்றுவரும் வசதியும் பக்தர்களுக்குக் கிடைக்கும். இன்று காலை 4 மணிக்கு கோயிலுக்கு செல்ல தமிழக, கேரள பூசாரிகள் அனுமதிக்கப்படுவர். காலை 6 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மாலை 5 மணிக்குள் கோயிலில் இருக்கும் பக்தர்கள் திரும்பிவிடவேண்டும் என கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் என்றார்.
கோயிலுக்கு செல்லும் வழிகள்கண்ணகி கோயிலுக்கு செல்ல தேனி மாவட்டம் பளியன்குடியில் இருந்து காடுகள் வழியே பாதை உள்ளது. வன எல்லையில் இருந்து 6.5 கிலோ மீட்டர் காடுகளுக்குள் பயணிக்க வேண்டும். இந்த வழியில் வாகனங்களில் செல்ல முடியாது.
கேரள மாநிலம் குமுளியில் இருந்து 14 கிலோ மீட்டர் வனப்பகுதியில் ஜீப்பில் கண்ணகி கோயிலுக்கு செல்லலாம். விழா காலங்களில் மட்டுமே இப்பகுதிக்கு செல்ல கேரள வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். தமிழகப் பகுதியில் இருந்து கேரள மாநிலம் குமுளி வரை வழக்கமாக பஸ்கள் சென்று வருகின்றன.
சொற்கோயில், கற்கோயில்கணவன் கோவலனை இழந்த கண்ணகி, தனது கோபக்கனலால் மதுரையை எரித்துவிட்டு அங்கி ருந்து புறப்பட்டு தற்போதைய தேனி மாவட்டம் கூடலூருக்கு தெற்கில் உள்ள வண்ணாத்திப்பாறை என்ற மலைப்பகுதியில் நிலைகொண் டார். இழந்த கணவனை மீண்டும் இப்பகுதியில் பெற்று ‘மங்கலதேவி’ எனும் மாண்பு பெற்றார். இதன்பின் சுருளிமலைச்சாரல் திருச் செங்குன்ற வேங்கைக்கானலில் நின்று உயிர்நீத்தார். இதனால் இப்பகுதி கண்ணகிக் கோட்டம் என அழைக்கப்பட்டது.
அப்பகுதி மக்களின் இலக்கியத்தை அழகு காப்பியமான சிலப்பதிகாரமாக உருவாக்கியவர் சேரமன்னின் தம்பி இளங்கோவடிகள். தனது தம்பியின் காப்பியத்துக்கு வடிவம் கொடுக்கும் வகையில் வண்ணாத்திப்பாறை பகுதியில் மங்கலதேவி கண்ணகிக்கு கோயில் கட்டியவர் அண்ணன் சேரமன்னன். கண்ணகிக்கு இளங்கோவடிகள் தனது சொற்களால் சிலப்பதிகாரத்தைப் படைத்து சொற்கோயில் அமைக்க, அவரது அண்ணன் சேர மன்னனோ கண்ணகிக் கோட்டத்தை உருவாக்கி கற்கோயில் அமைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago