சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்ட திட்ட அறிக்கை ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிதாக 3 புதிய வழித்தடங்களில் மொத்தம் 114 கி.மீ. தூரத்துக்கு ரயில்பாதை மற்றும் ரயில் நிலையங்களுக்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இரு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆலந்தூர் கோயம்பேடு வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த பணிகளில் சுமார் 70 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க மெட்ரோ ரயில்வே நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சின்னமலை விமான நிலையம், ஆலந்தூர் பரங்கிமலை வழித்தடத்தில் கடந்த சில மாதங்களாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இம்மாதம் இறுதியில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வந்து ஆய்வு நடத்தி ரயில்களை இயக்க ஒப்புதல் அளிக்கவுள்ளார். அதன்பிறகு, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் பயணிகளுக்கான சேவை தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டத்தில் 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்குவது தொடர்பாக பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மாதவரத்தில் இருந்து மயிலாப்பூர் வழியாக சிறுசேரி வரையிலும், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு, பெரும்பாக்கம் வழியாக சோழிங்க நல்லூர் வரையிலும், நெற்குன்றத்தில் இருந்து கோயம்பேடு வழியாக வி.இல்லம் வரையிலும் என மொத்தம் 114 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிக்கப் பட்டுள்ளது. மெட்ரோ ரயில் இயங்கவுள்ள பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் இடங்கள் ஆகியவை தேர்வு செய்யப்பட்டு வரைபடங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திட்ட அறிக்கையை மாநில அரசிடம் காட்டி, ஒப்புதல் பெற மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்ட திட்டம் மாதவரம் சிறுசேரி (மயிலாப்பூர் லஸ் வழியாக) மாதவரம் சோழிங்கநல்லூர் (கோயம்பேடு, பெரும்பாக்கம் வழியாக) நெற்குன்றம் வி.இல்லம் என மொத்தம் 114 கி.மீ. தூரத்துக்கு 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தினோம்.
மெட்ரோ ரயில்வே அதிகாரிகள், ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக்ஸ் சர்வீஸ் (ரைட்ஸ்) நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய 15 பேர் கொண்ட குழு கடந்த 7 மாதங்களாக ஆய்வு நடத்தியது. எங்கெல்லாம் ரயில் நிலையங்கள் அமைப்பது, எங்கெல்லாம் சுரங்க வழிப்பாதைகள், உயர்மட்ட ரயில் பாதைகள் அமைப்பது என்பது குறித்து ஆராயப்பட்டது. இதற்கான இடங்களை தேர்வு செய்து வரைபடங்களையும் தயாரித்துள்ளோம். சுரங்கப் பாதைகளை விட, உயர்மட்ட பாதையில்தான் அதிக தூரம் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிட்டுள்ளோம். மொத்தம் ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 2 மாதங்களில் இத்திட்டம் தொடர்பாக மாநில அரசிடம் எடுத்துரைத்து, ஒப்புதல் பெறுவோம். பின்னர், மத்திய அரசின் ஒப்புதலும் பெற திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago