75,000 வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்கட்ட சோதனை முடித்து சீல் வைப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட உள்ள 75 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (பேலட் யூனிட்கள்) முதல்கட்ட சோதனை முடிக்கப்பட்டு, அதற்கான அத்தாட்சியாக ஊதா நிற காகித சீல் வைக்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் முழுக்க முழுக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத் தப்படுகி றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது இரு பாகங்க ளைக் கொண்டது. முதலாவது, நாம் வாக்குகளை பதிவு செய்யும் கருவி (பேலட் யூனிட்) ஆகும். அது, ‘கன்ட்ரோல் யூனிட்’ எனப்படும் மற்றொரு கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும். நான்கு வாக்குப்பதிவு கருவிகள், ஒரு கன்ட்ரோல் யூனிட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

முதல்கட்டமாக, மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்பட உள்ள 75 ஆயிரம் பேலட் யூனிட்களை பெல் நிறுவன அதிகாரிகள் சோதனை செய்து முடித்துள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’வி டம் தமிழக தேர்தல் துறையி னர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் தேர்தலுக்குப் பயன்படுத்தப் படவுள்ள பேலட் யூனிட்கள் மற்றும் ‘கன்ட்ரோல் யூனிட்கள்’, அந்தந்த மாவட்டத் தலைநகர்களில் உள்ள மையங்களில் வைக்கப்பட்டுள் ளன. அவற்றை மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் சரிபார்க்கும் பணி முடிந்துள்ளது. இந்த சரிபார்ப்புப் பணிகளை பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவன (பெல்) பொறியாளர்கள் மேற்கொண்டனர்.

சரிபார்ப்பு பணி முடிந்து விட்டதால், தற்போது அவற்றில் ஊதா நிறக் காகித சீல்கள் (பிங்க் பேப்பர் சீல்) வைக்கப்பட்டு வருகின்றன. பதிவு பெற்ற அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் இந்தப் பணி நடக்கிறது. வேட்புமனுத் தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அவர்கள் முன்னிலையில் அந்தந்தத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் ஒருமுறை சோதனை செய்து பார்க்கப்படும்.

அதன்பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடக்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE