விருத்தாசலம் அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தில் ஜெயலலிதா படத்தை சேதப்படுத்தியதாக 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருத்தாசலம் சட்டபேரவை உறுப்பினராக இருப்பவர் வி.டி.கலைச்செல்வன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கத்தில் சேர்க்க இரு அணியினரும் போட்டிக் கொண்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், விருத்தாசலத்தில் இயங்கிவரும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள்,தொகுதி மக்களின் மனதறிந்து தான் எம்எல்ஏ செயல்படவேண்டும் எனவும், சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியே ஜெயலலிதா என்பதால் அவரது சமாதியை மெரினாவிலிருந்து அகற்றுவதோடு, சசிகலா அணியினருக்கு ஆதரவளிக்கக் கூடாது எனவும் விருத்தாசலம் அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வனுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அணியை சேர்ந்தவராகக் கருதப்படும் கலைச்செல்வன், நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பின் போது முதல்வர் பழனிச்சாமி அணிக்கு ஆதராக வாக்களித்துள்ளார்.
இந்த நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், ஞாயிற்றுக்கிழமை விருத்தாசலத்திலுள்ல பெரியார் நகரில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திற்குள் சென்று, அங்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்தை சேதப்படுத்தி, அலுவலகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 54 பேரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago