சித்த மருத்துவத் துறையில் போலி இணையதளங்கள்! - இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் எச்சரிக்கை

By ஆர்.கிருபாகரன்

சில மருத்துவப் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறாமல் மருத்துவப் பயிற்சி அளித்து போலிப் பதிவுச் சான்றுகள் மற்றும் பட்டங்கள் வழங்கி வருகின்றன. அவை இந்திய மருத்துவ மத்தியக் கவுன்சில் (சிசிஐஎம்) மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆகியவற்றின் இலச்சினையை பயன்படுத்தி, ஒரே மாதிரியான இணையதள முகவரிகளைக் கொண்டு இயங்கியது கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ மத்தியக் கவுன்சில் பதிவாளரும், செயலருமான பிரேம்ராஜ் சர்மா எச்சரித்துள்ளார்.

நவீன மருத்துவத்தைப் போலவே சித்த மருத்துவத்துக்கும் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட பி.எஸ்.எம்.எஸ். (Bachelor of Siddha Medicine & Surgrey) பட்டப் படிப்பும், 3 ஆண்டுகள் கொண்ட எம்.டி. (Doctor of Medicine in Siddha) சித்த மருத்துவப் பட்ட மேற்படிப்பும் உள்ளன.

இதற்கென தமிழகத்தில் சென்னை, பாளையங்கோட்டையில் 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளிலும், ஸ்ரீபெரும்புதூர், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்குகின்றன.

இங்கு பட்டப்படிப்பை முடித்தவுடன் சித்த மருத்துவர்கள், இந்திய மருத்துவ மத்தியக் கவுன்சிலின் (சி.சி.ஐ.எம்.) சட்டப்படி, அதன்கீழ் இயங்கும் தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றத்தில் (tamilnadu siddha medical council) பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே அவர்கள் தனியாக மருத்துவம் பார்க்க தகுதி பெறுவார்கள்.

இவை தவிர பரம்பரையாக சித்த மருத்துவம் செய்து வந்தவர்களுக்கு தமிழ்நாடு சித்த மருத்துவமன்றம் பதிவு சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே அந்த சான்று பெற்றவர்களும் சித்த மருத்துவர்களாகத் தகுதி பெறுகின்றனர்.அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள், தங்கள் மருத்துவமனை பற்றியோ, குணப்படுத்தும் நோய்களைப் பற்றியோ துண்டுப் பிரசுரங்களாகவோ, தொலைக்காட்சி விளம்பரமாகவோ வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கொல்கத்தாவில் அங்கீகாரம் பெறாத பட்டப்படிப்பை நடத்தி வந்த மையம் குறித்து பொது அறிவிப்பு அக்டோபர் 8-ம் தேதி பத்திரிகையில் வெளியானது. அதாவது அந்த மையம் ஒரு BAMS என்ற பட்டப்படிப்பை அறிமுகப்படுத்துகிறது. பேச்சிலர் ஆஃப் ஆல்டர்நேட்டிவ் மெடிக்கல் சிஸ்டம் என்பது அதன் விரிவாக்கம். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பின் பெயர் பேச்சிலர் ஆஃப் ஆயுர்வேதிக் மெடிசன் அண்ட் சர்ஜரி (BAMS). எனவே ஒரே மாதிரியான பெயரில் பட்டப்படிப்பு நடத்தப்படுவது கண்டறியப்பட்டு, அறிவிப்பாக வெளியிடப்பட்டது.

இந்திய மருத்துவப் பட்டங்கள் சட்டப்படி M.D (Acu), P.hd (Acu), M.D (TM), M.D(AM), BASM (Bachelor of alternative system of medicine), BAMS (Bachelor of altenative medical system) உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகரிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் இந்த பெயர்களில் ஏராளமான போலி மருத்துவர்கள் தினம் தினம் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் 3,320 மருத்துவப் பயிற்சி மையங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அனைத்து மருத்துவமனைகளையும் மத்திய அரசின் பதிவு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் 2010-ன் (Clinical Establishment (Registration & Regulation) Act 2010) கீழ் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அந்த நடைமுறை தமிழகத்தில் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதன் காரணமாகவே சித்த மருத்துவத்தில் போலிகள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ கவுன்சில் ஆகியவற்றின் பதிவாளர் ராஜசேகர் கூறுகையில், தமிழகத்தில் பல இடங்களில் அங்கீகாரம் பெறாமலேயே சித்த மருத்துவப் பயிற்சிகள் வழங்குகின்றனர். நமது மாநிலத்தில் குறைந்த அளவிலேயே சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. போலியாக மருத்துப் பட்டப்படிப்புகளை நடத்துபவர்கள், போலி மருத்துவர்கள் உள்ளிட்டோரை மார்ச் மாதத்துக்குள் கண்டறிந்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்