லோக் அதாலத்: 1.26 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு

By செய்திப்பிரிவு

திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிக்காட்டுதலின் பேரில், மெகா மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி முகம்மது ஜபருல்லா கான் தலைமை தாங்கினார்.

குடும்பநல மாவட்ட நீதிபதி முருகன், தலைமை நீதித்துறை நடுவர் செல்வம், சார்பு நீதிபதி சாந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேஸ்வரி பானுரேகா, நீதித்துறை நடுவர்கள் தமிழ்ச்செல்வி, யஸ்வந்த் ராவ் இங்கர்சால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து, குடும்பத் தகராறு, விவாகரத்து, தொழிலாளர் தகராறு போன்ற பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு கண்டனர்.

மேலும், மோட்டார் வாகன விபத்து வழக்கில் இழப்பீட்டு தொகையாக, ரூ.9.01 கோடியும், நில ஆர்ஜித வழக்கில் ரூ.38.74 கோடியும், சிவில் வழக்குகளில் ரூ.23.92 கோடியும், விவாகரத்து வழக்குகளில் ரூ.3.25 லட்சமும், குற்ற வழக்குகளில் ரூ.1.04 கோடியும், சிறு குற்ற வழக்குகளில் ரூ.1.76 கோடியும் இழப்பீட்டுத் தொகையாக வசூல் செய்யப்பட்டது. இந்த முகாமில், மாவட்டம் முழுவதும் 1.26 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்