அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்: காளைகள் முன்பதிவு தொடங்கின

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

அவனியாபுரம், பாலமேடு, அலங் காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற் கும் காளைகளை, கால்நடை பராமரிப்புத் துறையினர் நேரடியாக சென்று பரிசோதனை செய்து உடல் தகுதிச் சான்று மற்றும் டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

ஜல்லிக்கட்டு விளையாட்டை தடையின்றி நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் கொடுத் துள்ளார். இதனால், மதுரை மாவட் டத்தில் தற்போது ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. அவனியாபுரத்தில் 5-ம் தேதியும், பாலமேட்டில் 9-ம் தேதியும், அலங் காநல்லூரில் 10-ம் தேதியும் ஜல்லிக் கட்டு நடக்கிறது. இந்த விளை யாட்டில் பங்கேற்பதற்காக காளை களை அதன் உரிமையாளர்கள் தயார் செய்கின்றனர். மற்றொரு புறம் காளைகளை அடக்குவதற் கான பயிற்சியில் மாடுபிடி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான காளைகளை பரிசோதனை செய்து, உடல் தகுதிச் சான்று வழங்கி முன்பதிவு செய்யும் பணி நேற்று தொடங்கியது.

கடந்த காலத்தில் போலீஸார், விழாக் கமிட்டி நிர்வாகிகள் பரிந் துரையில் காளைகளுக்கு டோக் கன் வழங்கப்பட்டதால் தகுதியில் லாத காளைகளும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த ஆண்டு பல்வேறு நெருக்கடிகள், போராட் டங்கள், தடைகளை கடந்து நடப் பதால் பொதுமக்களிடம் ஜல்லிக் கட்டுக்கு பெரும் வரவேற்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அத னால், ஆயிரக்கணக்கான மக்கள் ஜல்லிக்கட்டை காண திரள்வார் கள். காளையை அடக்க இளைஞர் களும் வாடிவாசலுக்கு அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

உடல் ஆரோக்கியமில்லாத காளைகள், 7 வயதுக்கு மேல் உள்ள காளைகளை ஜல்லிக்கட் டில் ஈடுபடுத்தத் தடை விதிக்கப் பட்டுள்ளது. தகுதியில்லா காளை களுக்கு டோக்கன் வழங்கக் கூடாது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் எச்சரித்துள் ளார். அதனால், நேற்று முதல் அவனியாபுரம், பாலமேடு, அலங் காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக் கட்டில் பங்கேற்கும் காளைகளை கால்நடை மருத்துவர்கள் நேரில் பார்வையிட்டு பரிசோதனை செய்து தகுதிச் சான்று வழங்கினர்.

இதில், காளைகள் வயதாகிவிட் டதா, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றனவா, நோய் தொற்று காணப்படுகிறதா உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகள் ஒரு கிராமத்தில் இருந்தால் அந்த காளைகளை மொத்தமாக ஒரே இடத்தில் நிறுத்தி அந்த இடத்திலேயே மருத்துவர்கள் பரிசோதனை செய்து தகுதிச் சான்று வழங்கினர்.

இதுகுறித்து அலங்காநல்லூர் கால்நடை உதவி மருத்துவர் சி.மெரில்ராஜ் கூறியதாவது:

நாங்கள் காளைகளை பரிசோ தனை செய்து உடல் தகுதிச் சான்று மட்டும் வழங்குவோம். அவர்கள், ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதி கால்நடை மருத்துவரிடம் டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். முன்பு வருவாய்த் துறையினர் டோக்கன் வழங்கினர். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்துக்கு வந்த பின், நாங்கள் காளைகளை பரிசோதனை செய்து வருவாய்த் துறை டோக்கனைப் பெற்றுக்கொண்டு மற்றொரு டோக் கன் வழங்கி வாடிவாசலுக்குள் அனுமதிப்போம். இந்த ஆண்டு அந்த முறையை மாற்றி, கால் நடை பராமரிப்புத் துறை கட்டுப் பாட்டிலேயே ஜல்லிக்கட்டு நடக்கி றது. கால்நடை மருத்துவர்களே டோக்கன் வழங்குவார்கள் என்றார்.

ஆதார் கார்டு கட்டாயம்

ஜல்லிக்காட்டு காளைகளை முன்பதிவு செய்வதற்கு ஜல்லிக்கட்டு காளையின் 2 புகைப்படம் (மேக்ஸி/போஸ்ட் கார்டு சைஸ்), காளை உரிமையாளர்களின் 2 நகல் ஆதார் கார்டு, காளை உரிமையாளரின் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒன்று இல்லாவிட்டாலும், உடல் தகுதி இல்லாவிட்டாலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க சம்பந்தப்பட்ட காளைகளுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்