தமிழக-இலங்கை மீனவப் பிரச்சினையை தீர்வு காண வலியுறுத்தி தமிழக மீனவப் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நாளை (செவ்வாய்கிழமை) டெல்லியில் சந்தித்து பேசுகின்றனர்.
கச்சத்தீவு அருகே மார்ச் 6 திங்கட்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ (21) உயிரிழந்தார். ஜெரோன் (27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து மார்ச் 7 செவ்வாய்கிழமையிலிருந்து தங்கச்சிமடத்தில் மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையை கண்டித்து தொடர் தர்ணாப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்கச்சிமடத்தில் மீனவர்களிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதிமொழி அளித்தன் அடிப்படையில் மார்ச் 13 அன்று பிரிட்ஜோவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப் பட்ட படகுகளை விடுவிக்கவும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி தமிழக பிரநிதிகள் 10 பேர்களும், மீனவர் பிரிட்ஜோ மற்றும் ஜெரோன் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர்களும் இன்று (திங்கட்கிழமை) டெல்லி புறப்பட்டு பயணமாகினர்.
முன்னதாக சுஷ்மா ஸ்வராஜை நாளை (செவ்வாய்கிழமை) சந்திப்பதை முன்னிட்டு ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நடத்தி வந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago