ஈரோடு மாநகராட்சியில் குடிநீர், குத்தகை இனங்களில் 100% வரி வசூலித்து சாதனை

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு மாநகராட்சியில் குடிநீர், குத்தகை இனங்களில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் சீனி.அஜ்மல்கான் தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சியின் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, மொத்த வருவாய் வரவு ரூ.497.47 கோடியாகும். இவற்றில் வருவாய் வரவினம் மூலம் ரூ.101 கோடியும், மூலதன வரவினம் மூலம் ரூ.396 கோடியும் மாநகராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது. வருவாய் வரவினங்களில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து வரிவிதிப்புகள் மூலமாக ரூ.20 கோடிக்கு மேல் வரி வசூல் செய்யப்படுகிறது.

தொழில்வரி மூலம் ரூ.3.50 கோடியும், வணிகவளாகங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் மூலம் ரூ.3.31 கோடி மற்றும் சொத்துவரி, குடிநீர் வரி, வாடகை மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை மூலம் ரூ.101 கோடி வருவாய் வசூல் செய்யப்படுகிறது.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, பழைய ரூபாய் நோட்டுகளை வரி செலுத்துவதற்கு பயன்படுத்தலாம் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டதால், நிலுவையில் உள்ள வரி இனங்களை செலுத்துவதில் பொதுமக்களும், தொழில் நிறுவனத்தினரும் ஆர்வம் காட்டினர். இதனால், மாநகராட்சியின் வரி வருவாய் கணிசமாக அதிகரித்தது.

இந்த நிதியாண்டு இன்று நிறை வடையவுள்ள நிலையில், ஈரோடு மாநகராட்சி சார்பில் வரிவசூல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. நீண்டகாலமாக வரி பாக்கி வைத்துள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் வரிவசூல் செய்யும் பணியை அதிகாரிகள் விரைவுபடுத்தியுள்ளனர்.

மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தத் தவறினால், கடைகளை மூடி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. வரி வசூல் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் சீனி.அஜ்மல்கானிடம் பேசியபோது, “மாநகராட்சியில் பல்வேறு பணி களை மேற்கொள்ள வரி வசூலே பிரதானமாக இருந்து வருகிறது. 100 சதவீதம் வரிவசூலை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு, கடந்த சில மாதங்களாக தீவிரமாக அலுவ லர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுவரை 97 சதவீதம் வரிவசூல் நடந்து முடிந்துள்ளது.

குறிப்பாக குடிநீர் வரி, குத்தகை இனம் போன்றவைகளில் 100 சதவீ தம் வரி வசூல் செய்யப்பட் டுள்ளது. சொத்து வரியில் 98 சதவீதம் வசூலாகியுள்ளன. அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் வசூல் செய்த தொழில்வரியை செலுத்தாமல் உள்ளன. இதனை வசூல் செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்