வேட்பாளர்களுக்கு கட்சிச் சின்னம் ஒதுக்கக் கோரும் ‘பி ஃபார்மில்’ சசிகலா கையெழுத்திட முடியாது என அதிமுகவின் முன்னாள் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் என்.ஜோதி தெரிவித்தார்.
அதிமுகவின் முன்னாள் சட்ட ஆலோசகர் ஜோதி, கடந்த 2008-ல் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தற்போது ஓபிஎஸ் அணியில் இருக் கிறார். சசிகலா நியமன சர்ச்சை உள்ளிட்டவைகள் குறித்து ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதால் சசிகலா பொதுச் செயலாளர் ஆனது செல்லும் என்கிறார்களே?
ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டாலும் சசிகலாவின் பழைய சீனியாரிட்டி கட் ஆகிவிடும். மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகள் கழித்துதான் அவர் எந்தப் பதவிக்கும் போட்டியிட முடியும். எனவே, இப்போதைய அவரது நியமனமும் அவரால் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல் லாது.
தண்டனை குற்றவாளிகள் கட்சி யில் பொறுப்புக்கு வரமுடியாது என அதிமுக சட்ட விதிகளில் இருப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி சொல்கிறாரே?
அப்படியொரு அம்சம் அதிமுக சட்டவிதிகளில் இல்லை. இருந்திருந்தால் 2 முறை குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பொதுச்செயலாளர் பதவியில் நீடித்திருக்க முடியாதே.
தண்டனை குற்றவாளி ஒருவர் கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கலாமா என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?
குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் தேர்தல் ஆணையம், குற்றவாளி கள் முக்கியப் பொறுப்புகளில் இருந்து கட்சியை வழிநடத்துவதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இந்த அவல நில மாற வேண்டும் என்றால் தண்டனைக் குற்றவாளிகளும் கொடுங்குற்றங் களுக்கு ஆளானவர்களும் அரசி யல் கட்சிகளில் உறுப்பினராகவே இருக்க முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8 மற்றும் 9-ல் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் சின்னம் பெறுவதற்காக தரப்படும் ‘பி ஃபார்ம்’களில் சசிகலா கையெழுத்திட்டால் செல்லுமா?
சட்டப்படி செல்லாது. இதை எதிர்த்து முறையிட்டால் வேட் பாளர்களுக்கு கட்சிச் சின்னம் ஒதுக்கி இருந்தாலும் அது ரத்தாக வாய்ப்பிருக்கிறது.
அப்படியானால் அதிமுக வேட் பாளர்கள் கட்சிச் சின்னம் பெறுவது எப்படி?
பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றுகூடி, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுங்கள் என கோரிக்கை வைக்கலாம். அவைத் தலைவரும் பொருளாளரும் தற்போது வேறு அணியாக இருப்பதால் அவர் களுக்கு அடுத்த நிலையில் உள்ள (சசிகலாவால் நியமிக் கப்படாத) தலைமை நிலைய பொறுப்பாளர்கள் பொதுக் குழுவை கூட்டலாம்.
பொதுச்செயலாளர் பணிகளை கவனிக்க ஒருவரை தற்காலிகமாக அங்கீகரிப்பதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி, ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தால் அந்த குறிப்பிட்ட நபர் ‘பி ஃபார்மில்’ கையெழுத் திடலாம்.
சசிகலாவுக்கு பதிலாக டி.டி.வி. தினகரன் பொதுச் செயலாளராக வரலாம் என்கிறார்களே?
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் ரூ.28 கோடி அபராதம் கட்டவேண்டிய குற்றவாளி தினகரன். சசிகலா சிறைக்குச் செல்லும் நேரத்தில் இவரை கட்சியில் சேர்த்து துணைப் பொதுச்செயலாளர் பதவியும் தந்திருக்கிறார். தினகரன் கட்சி உறுப்பினரானதையே இன்னும் அங்கீகரிக்காதபோது, அவர் எப்படி பொதுச்செயலாளர் ஆகமுடியும்?
அதிமுகவில் இருந்து நீங்கள் வெளியேறியதற்கும் சசிகலா தரப்பினர்தான் காரணமா?
ஜெயலலிதா எனக்கு முக் கியத்துவம் அளித்தது சசிகலா தரப்புக்கு பிடிக்கவில்லை. ‘இவர் களுக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்து விரட்டி விடுங்கள்; கூடவே வைத்திருக்காதீர்கள் என்று நான் சொன்னதை கேட்காத ஜெயலலிதா, தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள தவறி விட்டார்.
இவ்வாறு வழக்கறிஞர் ஜோதி பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago