பசும்பொன் தேவர் சிலைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

By ராமேஸ்வரம் ராஃபி

ரூ.4.7 கோடி மதிப்பில் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு, 24 மணி நேர தூப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் நேற்று ரூ.4.7 கோடி மதிப்பில் 13 கிலோ தங்கத்தால் ஆன கவசங்களை முதல்வர் ஜெயலலிதா அணிவித்தார். இதனை பொதுமக்கள் பார்வைக்காக 10 தினங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, தேவரின் தங்கக் கவசமிடப்பட்ட சிலைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய நான்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் தேவர் தங்கக் கவசமிட்ட சிலை அருகிலும், மற்ற இரண்டு போலீசார் நினைவிட அறைக்கு வெளி வளாகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

10 நாள்கள் கழித்து கமுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சிறப்பு பாதுகாப்பு பெட்டகம் அமைத்து, அதில் தங்க கவசங்கள் வைத்து பாதுகாக்கப்படும் என தேவர் நினைவிடப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்