ரூ.50 லட்சம் தங்கப் பொடி டீத்தூளில் கலந்து கடத்தல்

By செய்திப்பிரிவு

தங்கப் பொடியை டீத்தூளில் கலந்து கடத்த முயன்ற வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கப் பொடி கைப்பற்றப்பட்டது.

இலங்கையில் இருந்து விமானம் ஒன்று புதன்கிழமை இரவு சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னை பாலவாக்கம் கோவிந்த் நகரைச் சேர்ந்த ரவிக்குமார் (34) என்பவரது உடமைகளை சோதனை செய்தபோது 6 டீத் தூள் பாக்கெட்கள் இருந்தன. அவற்றை மெட்டல் டிடெக்டர் கருவியில் வைத்தபோது அலாரம் அடித்தது.

சந்தேகம் அடைந்த அதிகாரி கள் ஒரு டீத்தூள் பாக்கெட்டை திறந்து தண்ணீரில் கொட்டினர். அப்போது டீத்தூளுடன் கலக்கப்பட்டிருந்த தங்க துகள்கள் மட்டும் தனியாக பிரிந்து வந்தது. 6 பாக்கெட்களில் மொத்தம் ஒன்றரை கிலோ தங்கப்பொடி இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம்.

இதையடுத்து, ரவிக்குமார் கைது செய்யப்பட்டார். அவர் சுற்றுலா விசாவில் கொழும்பு சென்று திரும்பி வந்துள்ளார். அவரிடம் டீத்தூள் பார்சலை கொடுத்து அனுப்பியது யார், சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்தார் என்பது குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்