பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் எஸ்.சீனிவாசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கறுப்புப் பணம், கள்ளப் பணம், தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று கூறி, பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தது மிகவும் தவறான முடிவு. இந்த அறிவிப்பால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்துறைகளில் 90 சதவீத வேலைகள் பணப் பரிவர்த்த னையாகவே நடந்துவந்தன. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தொழிலாளர்கள் தற்போது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
தொழிலதிபர் சேகர் ரெட்டி, முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் உள்ளிட்ட பலரிடம் வருமானவரித் துறை கடந்த டிசம்பர் 31-ம் தேதி வரை நடத்திய சோதனையில் ரூ.3 ஆயிரம் கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கம் ரூ.500 கோடி. அதிலும், புதிய நோட்டுகள் ரூ.92 கோடி. இவ்வளவு அதிகமான புதிய ரூபாய் நோட்டுகள் அவர்களுக்கு எப்படி கிடைத்தன?
வங்கிகளில் நிலவும் பணத் தட்டுப்பாட்டு பிரச்சினையைப் போக்குவதற்காக மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்துகிறது. பொது மக்கள் அதிக அளவில் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன் படுத்தி பரிவர்த்தனைகளை மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத் துகிறது. ஆனால், இதற்கான சேவைக் கட்டணம் ரத்து செய்யப் படவில்லை. மாஸ்டர் கார்டு, விசா கார்டு, பேடிஎம் உள்ளிட்ட கார்டுகள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவை. இந்திய நிறுவனத்தைச் சேர்ந்தது என்று கூறப்பட்டுவரும் பேடிஎம் கார்டுகூட, உண்மையில் சீனாவின் அலிபாபா நிறுவனத்தைச் சேர்ந்தது. இந்த கார்டுகளை நாம் அதிகம் பயன்படுத்தினால் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத்தான் லாபம்.
உலகின் எந்த நாட்டிலும் பண மில்லா பரிவர்த்தனை 100 சதவீத அளவுக்கு நடப்பதில்லை. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 46 சதவீதம், பிரான்ஸில் 45 சதவீதம், ஜெர்மனியில் 86 சதவீதம், ஆஸ்திரே லியாவில் 66 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை நடக்கிறது.
இந்தியாவில் 100 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை மேற் கொள்வது சாத்தியமல்ல. ஏனென் றால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்தான் இணையம் சேவையை பயன் படுத்துகின்றனர். உத்தரபிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் இன்னும் முழு அளவில் மின்சார வசதியே கிடைக்கவில்லை.
ரிசர்வ் வங்கி போதிய அளவு பணம் அச்சடித்து வழங்கினால் தான், பண மதிப்பு நீக்க நடவடிக் கையால் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப் பாடு பிரச்சினை தீரும். பொரு ளாதார வளர்ச்சி சீராக இன்னும் 12 முதல் 18 மாதங்கள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago