ஒட்டுமொத்த சென்னை மாநகரம் மற்றும் மேற்கு தமிழகத்தின் 3 மாவட்டங்கள் ஆகியவை நிலத்தடி நீரைச் சுரண்டி காலி செய்வதில் முதன்மை வகிப்பதாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
இதில் அதீத சுரண்டல் நகரமாக சென்னை மாநகரம் முதலிடத்தில் உள்ளது. கோவை, திருப்பூர், சேலம் ஆகியவையும் நிலத்தடி நீர் சுரண்டலில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ளன.
இது குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், திருப்பூரில் முக்கால்வாசிப் பகுதி, கோவை, சேலத்தில் 2-ல் மூன்று பங்கு பகுதி ‘மேலதிக நிலத்தடி நீராதர சுரண்டல்’ பகுதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நிலத்தடி நீராதார சுரண்டல் 100%. இந்த வகைமையில் வரும் எந்த ஒரு பகுதியிலும் நிலத்தடி நீராதார பயன்பபாடு தொடர்பான எந்த ஒரு வளர்ச்சித்திட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்ட பகுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் வீட்டு உபயோகத்திற்காகவும், வீடு கட்டும் திட்டப் பயன்பாடுகளுக்காகவும், அரசின் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்காகவும் நீர் தொடர்பான வர்த்தகமற்ற துறைகளின் பயனுக்காகவும் நிலத்தடி நீரை எடுப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகியவையும் ‘மேலதிக நிலத்தடி நீர் சுரண்டல்’ வகைமையின் கீழ் வருகிறது.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு 77% நிலத்தடி நீராதாரத்தை பயன்படுத்துகிறது என்கிறது இந்த அறிக்கை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago