புயலால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம்: ஆந்திர அரசு அறிவிப்பு

ஆந்திர அரசு 4 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு பொட்ட லங்கள், தண்ணீர் போன்றவற்றை வழங்கினர். புயலால் உயிரிழந் தோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சமும், படுகாயமடைந் தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கான்கிரீட் வீடு இழந்தவர் களுக்கு ரூ. 50 ஆயிரம் குடிசை வீடு இழந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம், படகுக்கு ரூ. 10 ஆயிரம், மீன் வலைக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

துண்டிக்கப்பட்ட தொலைத் தொடர்பு வசதிகளை சீரமைக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், மின்சாரம் இல்லாததாலும் பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந் துள்ளனர்.

ராஜ்நாத் அறிவுறுத்தல்

இதனிடையே, ‘ஹுத் ஹுத்’ புயல் பாதிப்புகள் குறித்து பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

வானிலைச் சீற்றத்தைச் சமாளிக்க முழு அளவில் தயாராக இருக்கும்படி அவர்களிடம் ராஜ் நாத் அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE