உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் போராட்டக் குழு’ என்ற அமைப்பின் சார்பில் போராட்டங் கள் நடத்தப்பட்டு வருகிறது.

உயர்நீதி மன்றத்தின் முதன்மை அமர்வில் வியாழக்கிழமை காலை விசாரணை தொடங்கியதும், வழக்கறிஞர்கள் ம.பாரி, பகத்சிங், பாவேந்தன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி நுழைந்தனர். வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டம் காரணமாக தற்காலிக தலைமை நீதிபதி சதிஷ் கே. அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகி யோர் விசாரணையை நிறுத்தி விட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறினர். 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர். இதனால் உயர்நீதி மன்றத்தின் முதன்மை அமர்வில் வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்குப் பின்னர்தான் விசாரணை நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்