மாற்றுத் திறனாளிகள், வயதான வர்கள், குழந்தைகள் எளிதில் நடந்து செல்வதற்காக சென்னை யில் பல கோடி செலவில் புதிய வடிவில் நடைபாதைகள் கட்டப் பட்டுள்ளன. நடைபாதையில் கடை போடுபவர்கள் அவற்றையும் ஆக்கிரமித்துவிட்டதால் மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், பொது மக்கள் பெரிதும் அவதிப்படு கின்றனர்.
தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. போக்குவரத் துக்கும் பாதசாரிகளுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தும் நடை பாதைக் கடைகளை அகற்ற வேண் டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் உள்ளாட் சித் துறையினரும் போலீஸும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனமாகவே உள்ளனர்.
இதற்கிடையே, ஐ.நா. சபையின் வழிகாட்டுதல் மற்றும் நீதிமன்றங் களின் அறிவுரைகள் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் எளிதில் பயன்படுத்தும்படியான, சர்வதேச அளவிலான புதிய வடிவமைப்பு நடைபாதைகளை சென்னை மாநகராட்சி அமைத்து வருகிறது.
புதிய நடைபாதைகள்
இந்த புதிய நடைபாதைகள் முன்பு இருந்ததைவிட அகலமாக (5 அடி அகலம்) சரிவுகளுடன் அமைக்கப் படுகின்றன. கட்டிடங்கள், தெருக் கள் சந்திக்கும் பகுதிகளிலும் குறுக்கே நடைபாதைகள் அமைக் கப்பட்டு அவற்றை வாகனங்கள் கடப்பதற்கு சரிவாக கட்டமைக்கப் படுகிறது. இதேபோல, நடைபாதை களில் வாகனங்களை ஓட்டிச் செல்லவோ, நிறுத்தவோ முடியாத படி சிறிய சிமென்ட் தடுப்புகளும் அமைக்கப்படுகின்றன.
முதல்கட்டமாக 41 போக்கு வரத்து சாலைகளில் அதாவது பாந்தியன் சாலை, போலீஸ் கமிஷ னர் அலுவலக சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, ஸ்டெர் லிங் சாலை, பெசன்ட் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதி களில் புதிய நடைபாதைகள் கட்டப்பட்டுள்ளன.
பல கோடி ஒதுக்கீடு
2-ம் கட்டமாக சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை, தி.நகரின் முக்கிய சாலைகளான பர்கிட் சாலை, சாரங்கபாணி தெரு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சி.ஐ.டி. நகர் உள்ளிட்டவற்றில் புதிய அகல நடைபாதைகள் அமைக்கும் பணி நடந்து வரு கிறது. இதற்காக பல கோடி ரூபாயை சென்னை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.
ஆனால், இந்த நடைபாதை களும் வழக்கம்போல பாதசாரி களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஆக்கிரமிப்பாளர் களுக்கே வரப்பிரசாதமாக அமைந் திருப்பதுதான் வேதனை. முதல் கட்டப் பணியின்போது அமைக்கப் பட்ட புதிய நடைபாதைகளில் பல இடங்களையும் ஆக்கிரமிப் பாளர்கள் கடைகளைப் போட்டு விட்டனர். இளநீர், கரும்பு ஜூஸ், பஞ்சர் கடை, பொம்மைக் கடை கள், நடமாடும் வண்டிகள், பழக் கடைகள், சிறிய அளவில் துணி விற்பனை என பலவிதமான கடை கள் புற்றீசலாக முளைத்துவிட்டன. இவற்றை மாநகராட்சி அதிகாரி கள், போலீஸார் கண்டுகொள் ளாமல் விட்டுவிட்டனர்.
கவனிக்குமா மாநகராட்சி?
இதுபற்றி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான பார்த்த சாரதி என்ற மாற்றுத்திறனாளி கூறும்போது, ‘‘மருத்துவமனை அருகில் புதிய நடைபாதைகள் முழுவதும் கடைகள் போட்டுள்ள னர். இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகள், மருத்துவமனை ஊழியர்கள் வாகனங்களுக்கு மத்தியில் சாலைகளில் இறங்கி நடக்கவேண்டியுள்ளது.
விபத்துக்கு ஆளாக நேர் கிறது. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக வடிவமைக் கப்பட்ட பாதைகளை நிரந்தர மாக ஆக்கிரமித்துவிட்டனர். போலீஸார், மாநகராட்சி அதிகாரி கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதிலும் அரசியல் தலையீடு
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நடைபாதைகளில் உள்ள கடை களை அகற்ற பலவிதமான நடவடிக் கைகளை எடுத்து வருகிறோம். உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீட்டால் போலீஸார் எங் களுக்கு ஒத்துழைப்பு அளிப்ப தில்லை’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago