அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு பதவிகளை வகிப்போர் திங்கள்கிழமை தங்களுடைய பதவி களை ராஜினாமா செய்கின்றனர்.
அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. மதுரைக்கு துணை மேயர் கோபாலகிருஷ்ணன், விருதுநகருக்கு சிவகாசி ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருஷ் ணன், சிவகங்கைக்கு தேவக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக் கப்பட்டுள்ளனர்.
மேலும் தஞ்சாவூருக்கு நீலகிரி ஊராட்சித் தலைவர் பரசுராமன், பெரம்பலூருக்கு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மருதைராஜ், பொள்ளாச்சிக்கு மூங்கில்தொழுவு ஊராட்சித் தலைவர் மகேந்திரன், நீலகிரிக்கு (தனி) குன்னூர் நகராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணன், திருப்பூருக்கு கோபிச்செட்டிப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியபாமா, நாமக்கல்லுக்கு மாவட்ட கவுன்சிலர் சுந்தரம், விழுப்புரத்துக்கு (தனி) மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், காஞ்சிபுரத்துக்கு (தனி) திருப்போரூர் ஒன்றியக் குழு தலைவர் குமரவேலன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட் டுள்ளது. இன்னும் சில வேட்பாளர்கள் கூட்டுறவு சங்கப் பொறுப்புகளிலும் அரசு வழக்கறிஞர்களாகவும் உள்ளனர்.
கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் இன்னும் முடிவாகாத போதும் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் தாங்கள் வகித்துவந்த உள்ளாட்சி உள்ளிட்ட அரசு பொறுப்புகளை திங்கள்கிழமை காலையில் ராஜினாமா செய்துவிட வேண்டும் என தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வேட்பாளர்கள் அனைவரும் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் தொடங்கும் அதே நேரத்தில் தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago