கோபியில் வீழ்ச்சியடைகிறதா செங்கோட்டையன் செல்வாக்கு? - எம்பி சத்தியபாமா முடிவுக்கு ஆதரவு அதிகரிப்பு

By எஸ்.கோவிந்தராஜ்

அதிமுக அவைத்தலைவராக செங் கோட்டையனை சசிகலா நியமித்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த திருப்பூர் எம்பி சத்திய பாமா, ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எட்டு முறை வெற்றிக்கனியைத் தந்த கோபி சட்டப்பேரவை தொகுதி மக்களி டையே, செங்கோட்டையனின் தற்போதைய நிலைப்பாடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற போட்டியில் சசிகலா மற்றும் ஓ.பன் னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆரம்பம் முதலே சசிகலாவின் ஆதரவாளராக தன்னைக் காட் டிக்கொண்ட கே.ஏ.செங்கோட்டை யனுக்கு, அமைப்புச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதிமுக அவைத்தலைவராக இருந்த மது சூதனன், ஓபிஎஸ் அணிக்கு மாறிய நிலையில், கட்சியின் அவைத்தலைவராக கே.ஏ.செங் கோட்டையன் அறிவிக்கப்பட்டுள் ளார்.

கோபி சட்டப்பேரவை தொகுதி யில் 9 முறை போட்டியிட்டு, 8 முறை வெற்றி பெற்றதன் மூலம், தொகுதி மக்களிடையே தனக்கு உள்ள செல்வாக்கை கே.ஏ.செங் கோட்டையன் நிரூபித்துள்ளார். சசிகலாவுக்கு ஆதரவு நிலை எடுத்ததன் மூலம், தொகுதியில் அவரது செல்வாக்கு சரிந்துள்ள தாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோபியை சொந்த ஊராக கொண்ட திருப்பூர் எம்பி சத்தியபாமா, செங்கோட்டை யனால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர். அவர் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறியதன் காரணமாக, தொகுதி யில் அவருக்கு செல்வாக்கு அதி கரித்துள்ளது. செங்கோட்டை யனின் முடிவை கண்டித்து வாட்ஸ்அப், குறுந்தகவல், கடிதம் என பல்வேறு வகையில் தொகுதி மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோபி தொகுதி அதிமுக பிரமுகர்களிடம் பேசிய போது அவர்கள் கூறிய தாவது:

அதிர்ச்சி

கட்சியில் இருந்து செங் கோட்டையனை ஒதுக்கிவைக்க சசிகலாவின் தலையீடுதான் காரணம் என கடந்த காலங்களில் கட்சி நிர்வாகிகளிடம் செங் கோட்டையன் வெளிப்படை யாக தெரிவித்துள்ளார். இருப் பினும், ஜெயலலிதாவுக்காகத் தான் தான் கட்சியில் தொடர் வதாக பலமுறை தெரிவித் துள்ளார். இந்த நிலையில், தற்போது சசிகலாவுக்கு ஆத ரவு நிலையை அவர் எடுத்துள்ளது அதிர்ச்சியை தருகிறது.

தொடக்கக் காலத்திலே, சசிகலா எதிர்ப்பை அவர் வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியபோது, கட்சி உடைந்துவிடும் என காரணம் கூறி அதனை ஏற்க மறுத்தார். தற்போது, ஓபிஎஸ் தலைமையில் அணி திரளும்போது அதற்கு ஆதரவு தராமல் இருப்பதால், கட்சி நிர்வாகிகள், அவரது உறவினர்கள், வாக்களித்த வாக் காளர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றனர்.

திருப்பூர் எம்பியும், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர், செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளைக் கொண்டுள்ள சத்தியபாமாவைத் தொடர்ந்து, முன்னாள் மேயரும், மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினருமான மல்லிகா பரமசிவமும் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து மல்லிகா பரம சிவம் கூறும்போது, ‘என் மனச்சாட்சிப்படி முதல்வருக்கு ஆதரவு அளித்துள்ளேன். எந்த வித குற்றச்சாட்டும் இல்லாத ஓபிஎஸ்-க்கு தொண்டர்கள் ஏகோ பித்த ஆதரவை அளிக்கின்றனர்’ என்றார்.

ஈரோடு மாவட்டத்தில்..

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் கே.வி.ராம லிங்கம், தோப்பு வெங்கடாசலம், தென்னரசு ஆகியோர் சசி கலாவுக்கு வெளிப்படை யாக தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.என்.கிட்டு சாமி, பி.ஜி.நாராயணன் ஆகி யோர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மீதமுள்ள நிர்வாகிகள் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் வெளிப் படையான கருத்தை தெரிவிக் காமல், மதில் மேல் பூனையாக இருந்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்