விருதுநகர் மாவட்டத்துக்கு படையெடுத்து வரும் அரிய வகை பறவைகள்: வருடாந்திர கணக்கெடுப்பில் தகவல்

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டத்துக்கு பல அரிய வகை சிற்றினப் பறவைகள் படையெடுத்து வந்தது தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்திர கணக்கெடுப்பில் 169 வகையான சிற்றினப் பறவைகள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் பறவை கள் கணக்கெடுப்பு உலகம் முழுவதும் நடத்தப்படுவது வழக்கம். நாட்டில் உள்ள பல் வேறு பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய ராஜபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

169 வகையான சிற்றினப் பறவைகள்

பறவை ஆர்வலர்களான சங்கர், சரண், பிரணவ் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர், பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டனர். இதில், மாவட்டத்தில் 169 வகையான சிற்றினப் பறவைகள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து கணக்கெடுப்பில் ஈடுபட்ட பறவை ஆர்வலர்கள் கூறும்போது, “ராஜபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகள், சாம்பல் நிற அணில்கள் சரணாலயப் பகுதி, கருங்குளம் ஏரி, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரி, கொண்டனேரி ஏரி, அய்யனார்கோவில் அருவி உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், ராஜபாளையம் பகுதியில் உள்ள நீர்பிடிப்புப் பகுதிகளில் மட்டும் அதிக அளவில் 102 வகை சிற்றினப் பறவைகளும், அய்யனார் கோயில் அருவி மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலய பகுதிகளில் 55-க்கும் மேற்பட்ட வகை சிற்றினப் பறவைகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு நாமத்தலை வாத்து, பச்சைக்கால் கொசு உல்லான், மஞ்சள் கால் பச்சைப் புறா, வெண்தொண்டை காட்டு கருங்குருவி, பிளீத் நெட்டைக்காலி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.

மேலும், நீலமேனி ஈ பிடிப்பான், நீலகிரி மலர்க்கொத்தி ஆகிய இரண்டும் அய்யனார் கோயில் அருவி பகுதியில் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மஞ்சள் குருவி, சிவப்பு சில்லை ஆகியவை ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரியில் காணப்பட்டன. சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்திலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அரிய வகை சிற்றினப் பறவைகள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதோடு, பெரும்பாலான நீர்த்தேக்கப் பகுதிகளில் நாமக்கோழி மற்றும் நீலத்தலைக்கோழி போன்றவை நூற்றுக்கணக்கில் காணப்பட்டன. கடந்த ஆண்டு பதிவுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு அரிய வகை பறவை சிற்றினங்கள் பல விருதுநகர் மாவட்டத்துக்கு படையெடுத்து வந்துள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்