தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே காரும் தனியார் பஸ்ஸும் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னை பூந்தமல்லி பகுதி யைச் சேர்ந்த 6 பேர் காரில் திருச்செந்தூருக்கு சென்று கொண்டி ருந்தனர். சென்னையில் இருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்ட அவர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி அளவில் தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை விலக்கு பக்கத்தில் வந்து கொண்டி ருந்தனர்.
அப்போது விளாத்திகுளத்தில் இருந்து நாகலாபுரம், மேலக்கரந்தை வழியாக மதுரை சென்ற தனியார் பஸ் திடீரென மேலக்கரந்தை விலக்கில் தூத்துக்குடி- மதுரை நான்குவழிச் சாலையில் திரும்பியது.
திடீரென பஸ் வந்ததால், அதை கவனிக்காத கார், பஸ்ஸின் நடுப்பகுதியில் வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் பலத்த சேதம் அடைந்தது.
காரில் பயணம் செய்த சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ந. சம்பந்தம் (55), எஸ். தாமோதரன் (63), து. மகேந்திரன் (49), கார் டிரைவர் சங்கர் (48), மதுரை (37) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலத்த காயமடைந்த லோகநாதன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.
இது குறித்து மாசார்பட்டி போலீ ஸார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்த முனியசாமி (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே 3 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் வணிகர் சங்கத் தலைவர் அப்துல்ஹமீது மகன்கள் ஜகுபர் சாதிக் (39), ராஜாமுகமது (31). மணமேல்குடி அருகேயுள்ள இடையாத்திமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (28).
இவர்கள் மூவரும் தங்களது மளிகைக் கடைக்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு திருச்சி கல்லணையைச் சேர்ந்த ஷேக்தாவூத் முகமது (49) என்பவரது சுமை ஆட்டோவில் திருச்சியிலிருந்து ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை அதி காலையில் புறப்பட்டனர்.
கீரனூர் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து மோதியதில் சுமை ஆட்டோ சாலையோரமாக இருந்த இரும்புத் தடுப்பில் மோதி பலத்த சேதமடைந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே ஜகுபர்அலி, ராஜாமுகமது, ஷேக்தாவூத் முகமது ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த முத்துக்குமார் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
சிறப்பு உதவி ஆய்வாளர் காயம்…
விபத்தினால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீரமைத்துக்கொண்டிருந்த நெடுஞ்சாலை ரோந்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்மு கம் மீது அவ்வழியாகச் சென்ற மற்றொரு லாரி மோதியது. இதில் காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
லேசான காயத்துடன் மற்றொரு காவலர் தப்பினார். இது குறித்து கீரனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago