தமிழக அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய், சிறுநீரகம், இதய நோய் சிகிச்சைப் பிரிவுகளில் கடந்த 10 ஆண்டுகளில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித் துள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 90 லட்சம் உள்நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதில் புற்றுநோய், சிறுநீரகம், இதய சிகிச்சைப் பிரிவு களில், உள்நோயாளிகள் பிரிவில் அனும திக்கப்பட்டவர்களின் எண்ணிக் கைதான் கடந்த 10 ஆண்டுகளில் 4 மடங்கு உயர்ந்துள்ளது. குறிப் பாக மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனை, சென்னை ஸ்டான்லி மருத்து வமனையில் இந்த எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவல்கள் பற்றி, மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறியதாவது:
மருத்துவக் கல்லூரி மருத்துவம னைகளில் வெளிநோயாளிகளின் எண்ணிக்கை சராசரியாக இருந் துவரும் நிலையில், உள்நோயாளி களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், கடந்த 2007-ம் ஆண்டு 29,033 என்றிருந்த உள்நோயாளிகள் எண்ணிக்கை, கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 44,777 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல இதய நோயாளிகள் பிரிவில் 2007-ம் ஆண்டு 3,131 என்றிருந்த உள்நோயாளிகள் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து 2015-ம் ஆண்டில் 14,237 என 4 மடங்காக உயர்ந்துள்ளது.
அதேபோல, சிறுநீரகப் பிரிவில் 10,000-ல் இருந்து 17,000 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் இதே நிலை தான். சிறுநீரகப் பிரிவில் கடந்த 2007-ல் 1,248 என்றிருந்த உள்நோயாளிகள் எண்ணிக்கை, படிப்படியாக 8 மடங்கு உயர்ந்து கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 10,398 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, இதய நோயாளிகள் பிரிவில் 2007-ல் 1,367 ஆக இருந்த நோயாளி களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 2015-ல் மட்டும் 5 மடங்கு உயர்ந்து 6,276 ஆக உயர்ந்துள்ளது.
உள்நோயாளிகள் எண்ணிக்கை மட்டுமே இந்தளவு இருக்கும் நிலை யில், வெளிநோயாளிகளின் எண்ணிக் கையும் லட்சக்கணக்கில் தமிழக அரசு மருத்துவமனைகளில் உயர்ந் துள்ளது.
ஆபத்தான நிலையில், உள்நோயா ளிகள் பிரிவிலேயே இவ்வளவு பேர் சிகிச்சை எடுத்திருந்த நிலையில், இவர்களில் எத்தனை பேர் உயிரிழந் தனர் என்ற ஆய்வுகளை அரசு மேற்கொள்வதில்லை. ஒருபுறம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகரிக்க வேண்டும். ஆனால், பழைய பணி நியமனங்களே இருப்பதோடு, பல மருத்துவக் கல்லூரிகளில் இந்த பணியிடங்களும் காலியாக இருக்கின்றன.
தேனி, சிவகங்கை, திருவண்ணா மலை, தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், மதுரை, சென்னை அரசு மருத்துவ மனைகளைப் போல அனைத்து துறைக ளும் முழு அளவில் மேம்படுத் தப்படாத நிலை உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் அரசின் சுகாதாரத் துறையினர் கோடிக்கணக் கான ரூபாயில் மருந்து, மாத்திரைகளை வாங்குவதற்கு காட்டும் அக்கறையை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகா ரிப்பதற்கான உண்மையான காரணங் களை ஆராய்ந்து, அதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago