ஓவியம் வரைய கற்றுத் தருவதற் காக குழந்தைகளைத் தேடிச் செல்லும் கலைஞர், ஓராண்டில் மட்டும் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 3,248 பேருக்கு பயிற்சி அளித்துள்ளார்.
ஒரு பக்கச் செய்தியில் சொல்ல வேண்டிய தகவல்களை, ஒரு படத்தில் சொல்லி விடலாம். வண்ணங்கள் என்றாலே அவை ஓவியங்களைத்தான் குறிக்கும். தற்போது டிஜிட்டல் கலை நவீனமடைந்துவிட்டாலும், தூரிகை களால் உயிர்ப் பெறும் ஓவியங் களுக்கு இன்னமும் தனி மதிப்பு உள்ளது. தான் வாழும் சூழலை ஓவியங்கள் வாயிலாக கலைஞர்களால் அழகாக வெளிப்படுத்திவிட முடியும்.
கற்பனைத் திறனை அதிகரிப்பது டன், மனதில் தோன்றும் சிந்தனை யையும் வெளிக்கொண்டு வர முடியும். குழந்தைகள் ஓவியம் வரையப் பழகுவதால் அவர்களின் ஆளுமைத் திறனும், சிந்தனைக் குவிப்புத் திறனும் அதிகரிக்கும். ஆனால் பெரும்பாலான குழந்தை கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் உள்ளனர்.
அப்படிப்பட்ட குழந்தைகளைத் தேடி ஓவியம் கற்றுத்தருவதற்காக மதுரை ஜே.வி. அறக்கட்டளை மூலம் குழந்தைகளை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறார் மது ரையைச் சேர்ந்த ஓவியர் குணசேக ரன்.
வாழ்க்கையின் பிரதிபலிப்பு
இதுகுறித்து அவர் கூறிய தாவது: ஓவியம் என்பது வெறும் கலை மட்டுமல்ல. அது வாழ்க்கையின் பிரதிபலிப்பு. குழந்தையின் மழலைத்தனம் எவ்வளவு அழகானதோ, அவர் களின் கிறுக்கல்களும்கூட அதே போன்ற அழகான ஓவியங்கள்தான். நாம் மனதில் நினைப்பதை ஓவியங்கள்தான் வெளிக்கொண்டு வரும். ஒரு குழந்தையை அதன் வாழும் சூழலில் இருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றால் புதிய சூழலை புரிந்துகொள்ளவே சில நாட்கள் ஆகும். அதன் பின்னர், புதிய கற்பனையை உருவாக்க வேண்டும். எனவே, குழந்தைகள் வாழும் இடத்துக்கே சென்று ஓவியப் பயிற்சி அளிக்கிறோம். இதன்மூலம் ஒருவரால் தான் வாழும் சூழலை உணர முடியும். நாம் வாழும் சூழலை எங்கேயோ உள்ள ஒருவர் ஓவியமாக வரைவதைவிட நாமே அவற்றை ஓவியத்தில் பிரதிபலிப்பது இன் னும் சிறப்பாக இருக்கும். அனைத்து உண்மையும் அதில் பிரதிபலிக்கும். அப்போதுதான் எதார்த்தமான ஓவியங்கள் உருவா கும்.
மனநலம் பாதித்த குழந்தைகள்
மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர், வாடிப்பட்டி அரசுப் பள்ளி, ஈரோடு மனநலம் பாதித்த குழந்தைகள் பள்ளி, சிவகங்கை, சேலம், சீர்காழி, திருச்செங்கோடு, கோயில்பட்டி, சத்தியமங்கலம் பழங்குடியின குழந்தைகள், ஈரோடு பழங்குடியின குழந்தைகள் என மதுரை ஜே.வி. அறக்கட்டளை மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 3,248 குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்துள்ளேன்.
தொடர் பயிற்சி அவசியம்
பயிற்சியின்போது ஓவியம் வரை யும் முறை, புதிய வண்ணங்களை உருவாக்குதல், எதார்த்தத்தை ஓவியமாக உருவாக்குவது போன்ற பயிற்சிகளை கற்றுத் தருகிறோம். சில இடங்களில் ஒரு நாள், இரண்டு நாள் பயிற்சிகளும், சில இடங்களில் ஒரு வார பயிற்சி களும் வழங்கியுள்ளோம். ஆனாலும் முகாமில் நடத்தப்படும் பயிற்சியோடு நின்றுவிடாமல், அந்த மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் அளிக்க சம்பந்தப்பட்ட பள்ளிகள் முயற்சி எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago