கோடநாடு எஸ்டேட் கொலை வழக் கில் திடீர் திருப்பமாக கேரளாவைச் சேர்ந்த நபர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அவர் கொடுத்த தகவலின்பேரில் மலப்புரத்தைச் சேர்ந்த மேலும் 3 பேரிடம் போலீ ஸார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி அதிகாலை, காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து கொள்ளை முயற்சி நடந்தது. இந்த வழக்கில் சக காவலாளி கிருஷ்ண பகதூர் போலீஸார் விசாரணை வளையத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில், திடீர் திருப்ப மாக கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் சிக்கியுள்ளார். இறந்த ஓம் பகதூரை கழுத்தை நெரித் துக் கொலை செய்ய பயன்படுத் தப்பட்ட துணியில் மலையாள மொழி எழுத்துகள் இருந்ததால், கேரளாவைச் சேர்ந்த நபர்கள், கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். கோடநாடு வந்த வாகனங்கள் குறித் தும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த எஸ்டேட் அருகே வார்விக் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் வாகன நம்பர் பிளேட் கிடைத்தது.
இதன் அடிப்படையில் தனியார் விடுதிகளில் தீவிர விசாரணை நடந்தது. அப்போது அளக்கரை என்ற பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், கேரளாவைச் சேர்ந்த கொலையாளிகள் சதித் திட்டம் தீட்டி செயல்படுத்தியது தெரியவந்தது.
இதனால், தனிப்படையில் ஒரு பிரிவினர் கேரளாவுக்கு விரைந்த னர். நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு அந்த நபரை சுற்றி வளைத்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரை நேற்று நீலகிரி மாவட்டத் துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நபர் கொடுத்த தகவலின் பேரில் கேரள மாநிலம் மலப்புரத் தைச் சேர்ந்த சஜீஷன், தீபு மற்றும் சந்தோஷ் ஆகியோரை தமிழக போலீஸார் சுற்றிவளைத்துள்ளனர். கோவை மண்டல டிஐஜி தீபக் எம்.தாமோர் தலைமையில் போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்துக்கு சக காவலாளியான கிருஷ்ண பகதூர் உடந்தையாக இருக்கலாம் என்ப தால், அவரை தொடர்ந்து போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
அண்மையில் கூடலூரைச் சேர்ந்த முக்கிய புள்ளி அதிமுக வில் இணைந்தார். இவர் அதிமுக மேலிடத்துக்கு நெருக்கமானவர். கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் உள்ள அனைத்து மராமத்துப் பணிகளையும் கவ னித்து வந்தார். இதனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூடலூர் தொகுதியில் வெற்றி பெற இவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவத் துக்கு மூளையாக இவர் செயல்பட்டி ருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேகத்தை உறுதி செய்வதுபோல இவர் சில நாட்களுக்கு முன்பு துபாய் சென்றுவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago