அகில இந்திய மருத்துவத் தகுதி நுழைவுத்தேர்வுக்கு விலக்குக்கோரி சட்டப்பேரவையில் சட்டம் இயற்றியது தவறு. இருமொழி திட்டத்தால் தமிழகத்தில் கல்வித்தரம் பாதிப்பை சந்தித்து வருகிறது. இத்திட்டத்தை திராவிட கட்சிகள் கைவிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் 50 ஆண்டுகளில் காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மழை வெள்ளத்தாலும், தற்போது வறட்சியாலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உணவு பொருள் உற்பத்தி 10 சதவீதமாகக் குறைந்துவிட்டது. வறட்சியால் கடந்த 3 மாதத்தில் மட்டும் 250 விவசாயிகள் இறந்துள்ளனர்.
விவசாயிகள் மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம், நன்செய் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 வரை செலவிட்டுள்ளனர். ஆனால் வறட்சி நிவாரணமாக அரசு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.7500 வரை மட்டுமே அறிவித்துள்ளது. 17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை ஏக்கருக்கு மானாவரி பயிருக்கு ரூ.15 ஆயிரமாகவும், நன்செய் பயிருக்கு ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். 250 விவசாயிகளின் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வேலை இழந்துள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 1967 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருந்து வருகின்றன. இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலமாக ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்தில் கல்விச்சூழல் சீரழிந்து உள்ளது. இந்தியை எதிர்த்தவர்கள் தமிழை வளர்க்க தவறிவிட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த நவோதயா பள்ளிகளைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். நவோதயா பள்ளிகள் வந்திருந்தால் தமிழக மாணவர்கள் அகில இந்தியளவில் போட்டித் திறனை வளர்த்திருப்பார்கள். இரு மொழி கொள்கையால் தமிழக மாணவர்கள் நுழைவுத்தேர்வு எதிர்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மருத்துவத் தகுதி நுழைவுத் தேர்வுக்கு(நீட்) நிரந்தர விலக்கு கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது தவறானது. இது தமிழகத்துக்கும், தமிழக மாணவர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மாணவர்கள் பிற மாநில மாணவர்களுடன் போட்டியிட முடியாத நிலையில் இருப்பதால் நீட் விலக்கு கோரி சட்டம் கொண்டுவருவதாக அறிவித்திருப்பது கண்டிக்கதக்கது. எனவே நீட் உள்பட அனைத்து அகில இந்திய நுழைவுத்தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் பங்கேற்கும் வகையில் அவர்களை தயார்படுத்த வேண்டும். நீட் தேர்வால் ஒன்றிரண்டு ஆண்டுகள் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் பின்னர் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்வார்கள்.
தமிழக அரசியலில் 3 மாதங்களாக அசாதாரண சூழல் நிலவுகிறது. காலையில் ஒரு சூழல், மாலையில் ஒரு சூழல் என மாறுகிறது. இதை வெறும் அரசியல் மாற்றமாக கருத முடியாது. இந்த மாற்றத்திலும் அரசியல் உள்ளது. இது தொடர்பாக சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டத்தி்ல் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலர் பாஸ்கர் மதுரம், மாவட்டச் செயலர் தெய்வம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கோரி மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணசாமி பங்கேற்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago