நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார் மு.க.அழகிரி

By செய்திப்பிரிவு

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி இன்று காலை நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்துக்கு தனது மகன் தயாநிதியுடன் வந்தார் அழகிரி. பின்னர் இருவரும் நடிகர் ரஜினியை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி: "ரஜினிகாந்த் எனது நீண்ட கால நண்பர். அவரை சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து சொல்லவே வந்தேன். மற்றபடி வேறு எந்த அரசியல் பேச்சும் அவரிடம் பேசவில்லை. மன ஆறுதலுக்காகவே சந்தித்தேன்" என்றார்.

மேலும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் கோச்சடையான் பாடல்களை கேட்டு ரசித்ததாகவும், அதற்காக ரஜினியை பாராட்டியதாகவும் அழகிரி கூறினார்.

நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, அழகிரி சந்தித்தார். ஏற்கெனவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் அழகிரி அண்மையில் சந்தித்தார்.

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரி தொடர்ந்து அரசியல் தலைவர்களை சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்