தமிழக முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 19 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
கடலூர் மாவட்டத்தில் மொத்தமிருந்த 225 டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15 கடைகள் மூடப்பட்டன. நேற்று 19 கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 191 ஆக குறைந்துள்ளதாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார்.
நடைமுறையில் பார்க்கும்போது ஏற்கெனவே ஒரே இடத்தில் ஒரே கட்டிடத்தில் இரு கதவுகள் வழியாக விற்பனையாகிக் கொண்டிருந்த டாஸ்மாக் கடைகளில் ஒரு கடை மட்டுமே தற்போது மூடப்படுவதாகவும், இதனால் அதே இடத்தில் உள்ள மற்றொரு கடையில் கூடுதல் விற்பனைக்கு வழிவகுக்குமே தவிர மது அருந்துவோரின் எண்ணிக்கை குறையப்போவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதற்கு ஏற்றபடி, கடலூர் புதுப்பாளையத்தில் கடற்கரைக்கு செல்லும் சாலையில் 2565 என்ற கடையும், 2423 என்ற கடையும் ஒரு கட்டிடத்தில் இரு கதவுகள் வழியாக விற்பனை நடந்தது. அதில் தற்போது 2565 என்ற கடை மட்டுமே மூடப்பட்டுள்ளது. இதேபோல் நெய்வேலி வடக்குத்து பிடிஆர் நகர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரே இடத்தில் இருந்த கடைகளில் ஒன்று மட்டும் மூடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடலூர் இம்பீரியல் சாலையில் கடையை காலி செய்து கொண்டிருந்த விற்பனை மேலாளர் சுரேஷ்குமாரிடம் கேட்டபோது, “கடையில் உள்ள சரக்குகளை டாஸ்மாக் குடோனுக்கு எடுத்துவரச் சொல்லி உத்தரவு. அதன்படி மதுபாட்டில்களை திரும்ப எடுத்துச் செல்கிறோம்” என்றார்.
மாவட்ட கலால் அலுவலக அலுவலர்களிடம் விசாரித்தபோது, “எங்களது கணக்குப்படி கடை எண் அடிப்படையில் தான் கடைகளை மூடி வருகிறோம். அதன்படி தற்போது 19 கடைகளை மூடி வருகிறோம்” என்றார்.
இதுதொடர்பாக டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன் கூறுகையில், “சில இடங்களில் இதுபோல் நடப்பதுண்டு. டாஸ்மாக் மாவட்ட மேலாளர், அவருக்கு என்ன தோன்றுகிறதோ அனைத்தான் செய்வார். பொதுமக்களின் நலன்களை அவர் கருத்தில் கொள்ளமாட்டார். எங்களை பொறுத்தவரை மூடப்படும் கடைகளில் உள்ள ஊழியர்களை காலியாக உள்ள அரசுப் பணிகளில் பணியமர்த்த வேண்டும். ஆனால் அரசு இதுவரை அப்படி செய்யவில்லை. கடந்த ஆண்டு மூடப்பட்ட கடைகளில் பணி செய்த ஊழியர்கள் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். எனவே மூடப்படும் அதே நேரத்தில் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டியது அவசியம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago