தேனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை: சிகிச்சை அளிப்பதில் தாமதமாவதாக புகார்

By ஆர்.செளந்தர்

நூற்றாண்டு கண்ட தேனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை காரணமாக, நோயாளிகளுக்கு சிசிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பெரியகுளத்தில் செயல்பட்டு வருகிறது. சுமார் நூறாண்டுகள் பழமையான இந்த மருத்துவமனைக்கு, தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். நோயின் தன்மைக்கேற்ப, சுமார் 230 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மருத்துவர் பற்றாக்குறைவு காரணமாக நோயாளிகளுக்கு சிசிச்சை தாமதமாக கிடைப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் சமூக ஆர்வலர்களான ஜான்பிரிட்டோ, ராஜா ஆகியோர் கூறியதாவது:

நூற்றாண்டைக் கடந்த தலைமை அரசு மருத்துவமனை, கடந்த ஆண்டு தேசிய தரச்சான்று பெற்றுள்ளது. ஆனால், இங்கு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, பல், காது, மூக்கு, தொண்டை பிரிவு, இதய சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 15 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக இப்பிரிவுகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், சில நேரங்களில் உடனடியாக உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளி உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று விடுகின்றனர். பெரியகுளம் பகுதியில் வசிக்கும் ஏழை, எளியோர் சுமார் 30 கி.மீ. பயணம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்கின்றனர். பதவி உயர்வு, இடமாறுதல், பணி ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பெரியகுளம் மட்டும் இல்லாமல், தேனி மற்றும் கம்பம் அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர் பற்றாக்குறை நிலவுகிறது. நோயாளிகளின் அவலநிலைய எடுத்துரைத்து போதிய மருத்துவர்களை நியமிப்பது தொடர்பாக, தேனி மாவட்ட மருத்துவ இணை இயக்குநரிடம் புகார் மனு கொடுக்கலாம் என்றால், இணை இயக்குநர் பணியிடமும் காலியாக உள்ளது. மாவட்ட மருத்துவ துணை இயக்குநரை சந்திக்க முயன்றபோது அந்த இடமும் காலியாக உள்ளது தெரியவந்தது என்றார்.

இது தொடர்பாக, பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப் பாளரும், மாவட்ட மருத்துவ இணை இயக்குநருமான (பொ) செல்வராஜை தொடர்பு கொண்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்