தமிழக அரசியல்வாதிகளின் ரூ.12,500 கோடி கறுப்புப் பணம் முறைகேடாக மாற்றப்பட்டது தொடர்பாக கோகுலம் நிதி நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை மயிலாப்பூரில் 1968-ம் ஆண்டு கோபாலன் என்பவர் கோகு லம் நிதி நிறுவனத்தை தொடங்கினார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச் சேரி என 4 மாநிலங்களில் இந்நிறு வனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. கோகு லம் நிதி நிறுவன அலுவலகங்களில் நேற்று முன்தினமும், நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் 36 இடங்களிலும் கோவையில் 5, கேரளாவில் 29, புதுச்சேரியில் 2, பெங்க ளூரில் 7 என மொத்தம் 79 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.
இந்த சோதனை குறித்து வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
கடந்த நவம்பரில் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப் பட்டன. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் பதுக்கி வைத்திருந்த ரூ.12,500 கோடி கறுப்புப் பணத்தை தவறான வழிகளின் மூலம் வங்கிகளில் மாற்றியுள்ளனர். இதற்கு பல நிதி நிறுவனங்கள் உதவி செய் துள்ளன. கோகுலம் நிதி நிறுவன மும் பணத்தை மாற்றிக் கொடுத்ததாக சந்தேகம் இருக்கிறது.
கேரளாவைச் சேர்ந்த ஒரு தனியார் வங்கியில் இருந்து ரூ.3 ஆயிரம் கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளை கோகுலம் சிட்பண்ட் நிறுவனம் வாங்கியிருக் கிறது. இவை தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பணம் என்று கோகுலம் நிதி நிறுவனம் தெரி வித்துள்ளது. இது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மேலும், வரி ஏய்ப்பு செய் திருப்பதாகவும் புகார்கள் வந்தன. இதன்பேரிலேயே சோதனை நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெ. பணம் போட்ட நிறுவனம்
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பாக விமர்சனங்கள் எழுந்தபோது, அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், ஒரு ஆவணத்தை நிருபர்களிடம் காட்டினார். ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரசியலில் நுழைந்த காலத்தில் சில லட்சம் ரூபாயை கோகுலம் நிதி நிறுவனத்தில் தனது பெயரில் டெபாசிட் செய்தார்.
இதற்கு நியமனதாரராக (NOMINEE) சசிகலாவின் பெயரை விண்ணப்பத்தில் எழுதியிருந்தார்’ என்று கூறி, சசிகலா பெயர் எழுதப் பட்டிருந்த அந்த விண்ணப்பத் தின் நகலை பொன்னையன் காட்டினார். அந்த விண்ணப்பத்தை எடுப்பதற்காக சோதனை நடத்தப் பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago