தமிழகத்தில் 18 மற்றும் 19 வயதுக்கு உள்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் இன்னும் வாக்காளப் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவில்லை. அதே நேரத்தில், 30 முதல் 39 வயதுக்கு உள்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக சேர்ந்துள்ள வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய இறுதி வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக, வாக்காளர்களின் வயதுவாரியான எண்ணிக்கை மற்றும் சதவீதம் ஆகிய விவரங்கள், தேர்தல் துறை இணையத்தில் (www.elections.tn.gov.in) வெளியாகியுள்ளது.
வருத்தம்
இந்த பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், வாக்காளர் பட்டியலில் இளம் வயதினர் குறிப்பாக, 18 முதல் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவினர், மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள் ளனர் என்று வருத்தத்துடன் கூறினார்.
தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 18 முதல் 19 வயதுக்கு உள்பட்டவர்களில் 51 சதவீதத்தினர், வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
இளம் வாக்காளர்கள் குறைவு
இது 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு சேகரிக்கப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது. அதன்படி 24.46 லட்சம் பேர் இருக்க வேண்டும். ஆனால், 11.99 லட்சம் பேரே பட்டியலில் உள்ளனர்.
தற்போது, மக்கள்தொகை கணக் கெடுப்பு நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட தாலும், தமிழகத்தில் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாலும்
இந்த எண்ணிக்கை சற்று குறையலாம். எப்படி இருந்தாலும் இது குறைவான எண்ணிக்கை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.
இதற்காகத்தான், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் “மாணவர் தூதுவர்” திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு மாணவரைத் தேர்ந் தெடுத்து அவர்கள் மூலமாக, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கான
மனுக்களை மாணவர்களிடம் விநியோகித்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன. இதனால் கல்லூரி மாணவர்கள், வாக்காளர் பட்டியலில் சேரும் போக்கு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது என்று பிரவீன் குமார் கூறினார்.
30-39 வயதினரே அதிகம்
வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில், 18-19 வயது பிரிவினர், மிகக் குறைந்த அளவில் 2.3 சதவீதத்தினரே (11.99 லட்சம்) உள்ளனர். 20 முதல் 29 வயதுக்கு உள்பட்டவர்களின் எண்ணிக்கை 1.08 கோடி. இது மொத்த வாக்காளர்களில் 18.11 சதவீதம் ஆகும். இதுபோல், 30 முதல் 39 வயதுக்கு உள்பட்ட வாக் காளர்கள் தமிழகத்தில் 1.34 கோடி பேர் உள்ளனர். இது வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கையில் 21.71% சத வீதம் ஆகும். இந்த வயது பிரிவினர் தான் வாக்காளர்களிலேயே அதிக அளவில் உள்ளனர்.
மற்ற வயது பிரிவினர் விவரம் வருமாறு:
40-49 வயதுக்கு உள்பட்டவர்கள் 20.71% (1.16 கோடி), 50-59 வயதுக்கு உள்பட்டவர்கள் – 15.41% (82.82 லட்சம்), 60-69 வயதுக்கு உள்பட்டவர்கள் – 10.15% (54.5 லட்சம்), 70-79 வயதுக்கு உள்பட்டவர்கள் – 5.04% (27.09 லட்சம்) மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் – 1.77% (9.27 லட்சம்).
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago