மீன்வளத்துறையினரை கண்டித்து 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

By எஸ்.முஹம்மது ராஃபி

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையினரை கண்டித்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கினர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி மற்றும் சுருக்கு மடி, அதிக எச்.பி கொண்ட விசைத் திறன் கொண்ட படகுகள் ஆகியவற்றை தடுக்க தவறிய மீன் வளத்துறையைக் கண்டித்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் நாட்டுப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமையிலிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கினர். இவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர் நல உரிமைச் சங்கத்தின் தலைவர் அருள் கூறியதாவது,

''தமிழகத்தின் வங்காள விரிகுடா, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தால் கடல் வளம் அழிவதுடன் மீன்களின் இனப்பெருக்கம் அழிக்கப்படும் என்பதால் இந்த வலைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

பாக் ஜலசந்தி கடற்பகுதிக்குட்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகைப்பட்டிணம், திருவாரூர் ஆகிய 5 மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இந்த தடை செய்யப்பட்ட வலைகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டிய மீன்வளத்துறையோ தடைசெய்யப்பட்ட வலைகளை பயன் படுத்தும் மீனவர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

மேலும் அதிக எச்பி திறன் கொண்ட விசைப்படகுகளும் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமையிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கி உள்ளோம்.

மார்ச் 6-ம் தேதி 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களும் ஒன்று திரண்டு மணல்மேல்குடியில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்