கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் 25 ஆயிரம் டன் மாங்காய்கள் உதிர்ந்தன. கிலோ ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. அல்போன்சா, மல்கோவா, பங்கனப் பள்ளி, பெங்களூரா, பீத்தர், செந் தூரா, நீலம் வகை மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப் படுகின்றன. நிகழாண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியிலும் மா மரங்களில் பூக்கள் அதிக அளவில் பூத்தன. போதிய மழையின்றி மரங்களும், பூக்களும் கருகும் நிலையில், டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி மரத்தையும் விவசாயிகள் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், சந்தூர், தொகரப் பள்ளி, கண்ணன்டஹள்ளி, வேலம் பட்டி, காவேரிப்பட்டணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இத னால், மா மரங்களில் இருந்து 75 சத வீத மாங்காய்கள் உதிர்ந்துள்ளன.
இதுகுறித்து சந்தூரைச் சேர்ந்த விவசாயி பிரபாகரன் மற்றும் சிலர் கூறும்போது, ‘‘சந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. வறட்சியால் கடந்த 30 நாட்களில் ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்துக்கு தண்ணீர் வாங்கி ஊற்றினோம்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக ஆலங்கட்டி மழையுடன் கடும் சூறாவளி காற்று வீசியது. இதில், 50 சதவீத மாங்காய்கள் கீழே உதிர்ந்தன. 25 சதவீத இலைகளும் உதிர்ந்துவிட்டன. இதனால், மீதம் உள்ள 50 சதவீத மாங்காய்கள் வெயிலின் தாக்கம் பட்டவுடன் கருகி வருகின்றன.
கீழே விழுந்துள்ள காய்களை கூலி ஆட்கள் வைத்து சேகரித்து, ஊறுகாய் கம்பெனிகளுக்கு அனுப்பி வருகிறோம். கிலோ ரூ.15-க்கு விற்கப்பட்ட மாங்காய் கள், தற்போது கீழே உதிர்ந்ததால் கிலோ ரூ.1 முதல் ரூ.2.50 வரை விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். மாங்காய்கள் சேகரிக்கும் தொழி லாளர்களுக்கு கூலி, சாப்பாடு, வாகன செலவுகூட கிடைக்க வில்லை’’ என்றார்.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கூறும்போது, “வறட்சி, இயற்கை சீற்றத்தால் மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 25 ஆயிரம் டன் மாங்காய்கள் மழையால் சேதமாகி உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago