தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தியை தடுக்கவும், கொசுக்களை ஒழிக்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுநல வழக்கு மையத்தின் மேலாண்மை அறங்காவலர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கொசுவால் பரவும் நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசுவால் பரவும் நோய்களில் முக்கியமான டெங்குவை தடுக்க இதுவரை மருந்து, மாத்திரைகள் இல்லை. கொசு கடிக்காமல் பார்த்து கொண்டால் மட்டுமே டெங்கு உள்ளிட்ட கொசுவால் பரவும் நோயில் இருந்து தற்கொத்துக்கொள்ள முடியும்.
கொசு உற்பத்தியை பொருத்தவரை கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு, சிக்கன்குனியா, மர்ம காய்ச்சலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முதியேவர்கள், குழந்தைகள் இறந்தனர்.
கொசுக்களை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்த போதிலும், கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்தவும், குப்பைகளை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை பேரையூர், வாணியம்பாடி பகுதியில் டெங்கு உள்ளிட்ட கொசுவால் பரவும் நோய்க்கு பலர் உயிரிழந்துள்ளனர். டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கவில்லை. சாதாரண சிகிச்சையே அளிக்கப்படுகின்றன.
இதனால், தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாக கொசு வலை வழங்கவும், அரசு மருத்துவமனைகளில் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா உள்ளிட்ட கொசுவால் பரவும் நோயால் பாதிக்கப்படுவோருக்கு தனி வார்டு அமைக்கவும், தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைக்கவும், அவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற கிளையிலும் கொசு கடிக்கின்றன. அவற்றை யார் ஒழிப்பது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு வழக்கறிஞர் பதிலளிக்கையில், கொசுவிலும் நல்ல கொசு, கெட்ட கொசு என்றுள்ளது. நல்ல கொசுக்கள் நோய்களை பரப்புவதில்லை என்றார். தொடர்ந்து கெட்ட கொசுக்களை ஒழிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேட்ட நீதிபதிகள், கிராமங்களில் கொசு மருந்து அடிப்பதில்லை. அதிகாரிகள் கிராமங்களுக்கு செல்வதே இல்லை. கொசு மருந்தில் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கிறார்கள். அதனால் நாற்றம் அடிக்கிறது. வீட்டிற்கு வெளியே இருக்கும் கொசுக்கள் கொசு மருந்து அடித்த பிறகு வீட்டிற்குள் வந்து தங்கிவிடுகிறது என்றனர்.
பின்னர் தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தியை தடுக்கவும், கொசுக்களை ஒழிக்கவும் போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தலைமைச் செயலர், சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப். 9ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago