மதுரை மாவட்டத்தில் கருவேல மரங்களை அகற்றுவதில் சுணக்கம்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

By கி.மகாராஜன்

மதுரை மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சீமைக் கருவேல மரங்களை பிப். 27-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பிறகு பல்வேறு மாவட்டங்களில் அரசு, தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனியார் நிலங்களில் கருவேல மரங்களை அகற்றாமல் இருந்தால், அதை மாநகராட்சி நிர்வாகமே அகற்றி செலவுத்தொகையை இருமடங்காக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கருவேல மரங்கள் அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் போதிய ஆர்வம் காட்டாமல் உள்ளது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் கருவேல மரங்கள் அகற்றும் பணி திருப்திகரமாக இல்லை. வீட்டடி மனைகளாக மாற்றப்பட்ட விளை நிலங்களில் பல ஆயிரம் ஏக்கரில் கருவேல மரங்கள் காடு போல் வளர்ந்துள்ளன. உயர் நீதிமன்ற கிளை வளாகத்திலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை. இதையடுத்து மதுரை மாவட்ட நிர்வாகம் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற கிளை வளாகத்தில் கருவேல மரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. கருவேல மரங்களுக்குள் பாம்புகள் இருக்கின்றன என கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினமும், நேற்றும் உயர் நீதிமன்ற கிளையை சுற்றியுள்ள பகுதிகளில் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் பிற மாவட்டங்களில் நடைபெறுவது போல் மதுரை மாவட்டத்திலும் கருவேல மரங்களை அகற்றும் பணியை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு வழக்கறிஞர் ஆணையர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தாலுகா அளவில் கருவேல மரங்கள் அகற்றும் பணிக்கு பொறுப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளனர்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கருவேல மரங்களை அகற்ற டெண்டர் விடப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை மாவட்டத்திலும் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்