130 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலி: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் சிக்கல்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகம் முழுவதும் 130 பேரூராட்சி களில் செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால், இந்தப் பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 63 இரண்டாம் நிலை பேரூராட்சிகள், 199 முதல் நிலை பேரூராட்சிகள், 202 தேர்வு நிலை பேரூராட்சிகள், 64 சிறப்பு நிலை பேரூராட்சிகள் உட்பட 528 பேரூராட்சிகள் உள்ளன. மாநக ராட்சி, நகராட்சிக்கு அடுத்து மத்திய, மாநில அரசுகள் பேரூராட்சிகளில் அதிகளவு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கின்றன. அதனால், உள் ளாட்சிப் பணிகளில் பேரூராட்சி களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்நிலையில், மொத்தமுள்ள 528 பேரூராட்சிகளில் தற்போது 130 பேரூராட்சிகளில் செயல் அலு வலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏராளமான பில் கலெக் டர், தலைமை எழுத்தர், இள நிலை உதவியாளர், சுகாதாரப் பணியாளர், எலெக்ட்ரீஷியன், பிளம்பர், துப்புரவுப் பணியாளர்கள் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. ஒரே செயல் அலுவலர் இரண்டு பேரூராட்சிகளைச் சேர்த்து கவனிக்கின்றனர். பணிச் சுமை யால், அவர்களால் இரண்டு பேரூராட்சிகளின் நிர்வாகங்களைக் கண்காணிக்க முடியவில்லை. அதனால், செயல் அலுவலர் பணி யிடம் காலியாக இருக்கும் பேரூ ராட்சிகளில் குடிநீர் விநியோகம், சுகாதாரம், வளர்ச்சிப் பணிகள், அரசின் நலத் திட்ட உதவிகள் மற்றும் வரி வசூல் பணிகள் ஸ்தம்பித் துள்ளன.

இதுகுறித்து பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் சிலர் கூறியதாவது:

பேரூராட்சிகளில் காலிப் பணி யிடங்களை பதவி உயர்வு அடிப் படையில் பூர்த்திசெய்ய வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அப் படியே பதவி உயர்வு கொடுத் தாலும் தற்காலிக பதவி உயர்வு கொடுத்து அதற்கான ஊதிய உயர்வு கொடுக்கவில்லை.

கடந்த ஆட்சியில் 69 தேர்வுநிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சி யாகவும், 120 முதல் நிலை பேரூ ராட்சிகள் தேர்வு நிலையாகவும், 40 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலையாகவும் மாற்றி உள்ளன. ஆனால், தரம் உயர்த் தப்பட்ட பேரூராட்சிகளில் அதற் கான பணி அந்தஸ்து அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. பழைய கீழ்நிலை அதிகாரிகளே தொடர்கின் றனர்.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பேரூராட்சிகளில் கீழ்நிலை செயல் அலுலர்கள் தேர்தலை நடத்த அதிகாரம் கிடையாது.

உதாரணமாக சிறப்பு நிலை யாக்கப்பட்ட பேரூராட்சியில் முதல் நிலையில் பேரூராட்சியில் பணி புரியும் செயல் அலுவலர் தேர்தலை நடத்த முடியாது. அதனால், இந்த சிக்கலை அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு கொண்டுச் சென்று செயல் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கி காலிப் பணியிடங்களையும் நிரப்பினால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த முடியும். இந்த காலிப் பணியிட விவகாரம் முதல மைச்சர் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படவில்லை என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 secs ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்