உலகம் முழுவதும் நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி அருகே சாத்தான் பிடித்திருப்பதாக கூறி 16 வயது சிறுவனை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு தந்தையே கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை- தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் நேற்று காலை தூத்துக்குடி ரயில் நிலையம் வந்தது. அப்போது ஒரு பெட்டியில் சிறுவன் ஒருவன் காலில் இரும்பு சங்கிலியுடன் அமர்ந்திருந்தான். அச்சிறுவனை மீட்டு ரயில்வே போலீஸார் விசாரித்ததில், தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஜோசப் மகன் சாமுவேல் ஜார்ஜ் (16) எனத் தெரியவந்தது. இவரது தாயார் மேரி. தந்தை ஜோசப், தன்னை இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக சிறுவன் தெரிவித்தான். இரும்பு சங்கிலியை கல்லால் அடித்து உடைத்து தப்பித்து, சென்னையில் உள்ள சகோதரி வீட்டுக்குச் செல்வதற்காக ரயிலில் ஏறியதாக சிறுவன் போலீஸாரிடம் கூறினான்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாயார் மேரி, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு வந்தார். தனது மகனை பார்த்து அவர் கண்ணீர் வடித்தார். மேரி கூறும்போது, ‘அவனுக்கு மனநிலை சரியில்லை, சாத்தான் பிடித்துள்ளது எனக் கூறி கடந்த சில ஆண்டுகளாக கணவர் அடிக்கிறார். நான் தட்டிக்கேட்டால் எனக்கும் சாத்தான் பிடித்திருப்பதாகத் திட்டுவார். மருத்துவ பரிசோனையில் எந்த பிரச்சினையும் இல்லை. மனநிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் கல்லால் அடித்து இரும்பு சங்கிலியை அறுத்து தப்பியோட முயன்றபோது, அவனை பிடித்து கடுமையாக தாக்கினார். இருநாட்களுக்கு முன்பு திடீரென தப்பியோடிவிட்டான். அவனைத் தேடிச் சென்ற கணவரும் இதுவரை வீடு வரவில்லை. எனது மகனின் இந்த நிலைக்கு என் கணவர் தான் காரணம். இனிமேலும் எங்களுடன் அனுப்பினால் எனது கணவர் கொன்றே விடுவார் எனக் கூறி கண்ணீர் வடித்தார்.
ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் ஏற்பாட்டின்பேரில், சைல்டு லைன் மூலம் காப்பகத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் சிறுவன் பின்னர் ஒப்படைக்கப்படுவான். அவனிடமும் தாய் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்திய பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago