அமெரிக்க நிறுவனம் நடத்திய சமுதாய செயல்திட்ட போட்டியில் 2-வது முறையாக தங்கப் பதக்கம்: காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

அரசுப் பள்ளியில் பயின்றால் ஆங்கி லம் படிக்க வராது என்ற தவறான கருத்து நிலவி வரும் சூழலில், பிரமெரிக்கா என்ற அமெரிக்க நிறுவனம் டெல்லியில் அண்மையில் நடத்திய செயல்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில் திரு வாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் அறிக்கை சமர்ப்பித்து, விளக்கம் அளித்து தேசிய அளவில் 2-வது முறையாக தங்கப் பதக்கம் பெற் றுள்ளனர்.

ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு

இப்போட்டியில் மாணவிகள் சி.மாதவி, ஆர்.கோகிலா, ஜி.சாந்தி, கே.கனகா, மாணவர் பி.சுதர்சன் ஆகியோர், இந்தியாவில் ரயில்வே கேட்களை கடக்க முற்படும்போது ஏற்படும் விபத்துகள் குறித்து சமர்ப் பித்த அறிக்கை, அதுதொடர்பான அவர்களின் ஆங்கில விளக்கத்தின் அடிப்படையில் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டும் இதுபோன்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு போட்டியில், நாடு முழுவதும் இருந்து கலந்துகொண்ட 4,660 பள்ளிகளில் 3 பள்ளிகளுக்கு மட்டுமே பரிசு கிடைத்துள்ளது. அதிலும் 2 பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பயிற்றுவிக்கும் ராஜஸ்தான் மற்றும் மும்பையைச் சேர்ந்த தனியார் பள்ளிகள்.

தொடர்ச்சியாக வெற்றி பெற்று பரிசு பெறும் பின்னணியில் உள்ள கற்றல் முறை குறித்து காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஆனந்த் கூறியதாவது:

சரளமான ஆங்கிலப் பேச்சு

மாணவர்களின் சமூகப் பங்க ளிப்பு உணர்வை வெளிப்படுத்தும் செயல் திட்ட ஆய்வறிக்கை சமர்ப் பிப்பதே இப்போட்டி. இதில் பங் கேற்ற அனைத்துப் பள்ளிகளும் தரமான ஆய்வறிக்கையைச் சமர்ப் பித்தன. ஆனால், பரிசுக்குத் தேர் வாவதற்கு மாணவர்களின் ஆங் கிலப் பேச்சுத் திறனே முக்கிய மானது.

டெல்லியில் நடைபெறும் போட்டி யில் பங்கேற்கும் நடுவர்களுக்கு புரியும் விதமாக சரளமாக ஆங்கி லம் பேசும் அளவுக்கு, விவசாய குடும்பப் பின்னணியைக் கொண்ட மாணவர்களை பயிற்றுவித்ததில் தான் எங்களின் வெற்றி அடங்கி யிருக்கிறது.

விளையாட்டு முறை பயிற்சி

ஆங்கிலம் பேச அடிப்படையாக உள்ளது verb எனப்படும் வினைச் சொற்கள்தான். அதை படிக்க வைத்துவிட்டால் காலப்போக்கில் பெயர்ச்சொற்களை வைத்து மாணவர்களை ஆங்கிலம் பேச வைத்துவிடலாம். அந்த வகையில், எங்கள் பள்ளி மாணவர்களை சுமார் 400 வினைச்சொற்கள் வரை படிக்க வைத்து ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளித்துள்ளோம்.

உதாரணமாக நான் வகுப்பில் சைகை மொழியில் எழுதுவது போன்று காண்பித்தால் அதையே அவர்களும் செய்து காண்பித்து, we are writing என்பார்கள். தண் ணீரை தலையில் ஊற்றுவது போல காண்பித்தால், we are bathing என்பார்கள். இதுபோல பல்வேறு செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தி, அதை ஆங்கிலத்தில் சொல்ல வைத்து ஆங்கிலத் திறனை படிப்படியாக வளர்த்துள்ளோம்

சாய்னா நேவால் பாராட்டு

இப்படி விளையாட்டாக மாண வர்களை ஆங்கிலத்திலேயே பேசவைத்து அவர்களிடம் உள்ள கூச்சத்தைப் போக்குவோம். தவ றாகப் பேசும் மாணவரைக் கிண்டல் செய்வதாக இருந்தால் அதையும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று மற்ற மாணவர்களும் ஆங்கி லத்தில் பேச பயிற்சி அளிப்போம்.

இரண்டாவது முறையாக எங்கள் பள்ளிக்குக் கிடைத்துள்ள வெற்றி, மாணவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, தலைமையாசிரியர், சக ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்புக்குக் கிடைத்த வெற்றி யாகக் கருதுகிறோம் என்றார்.

இப்போட்டியை நடத்தும் பிரமெ ரிக்கா என்ற நிறுவனம் டெல்லியை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் அமெரிக்க நிறுவ னம். இது கடந்த 7 ஆண்டுகளாக இத்தகைய போட்டியை நடத்துகி றது. இந்த ஆண்டு நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மாணவர்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்